search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tecno Mobile"

    • புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது.
    • டெக்னோ ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.

    டெக்னோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்பார்க் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில் உள்ள "லுமினஸ் இகோ-லெதர் தொழில்நுட்பம்," வழங்கப்பட்டு இருக்கிறது.

    முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கும், புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் நிறத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மஜென்டா நிறத்தில் கிடைக்கும் நிலையில், ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.

     

    லுமினஸ் கலர் சேஞ்சிங் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். லுமினஸ் இகோ லெதர் தொழில்நுட்பம், சாதனத்திற்குள் வெளிச்சத்தை உறிந்து கொண்டு விவிட் மஜென்டா நிறத்தை ஃபுளுரோசென்ட் குளோ நிறத்திற்கு மாற்றுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மீது வெளிச்சம் படும் போது, நிறம் மாறுவதை உணர முடியும்.

    புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் பிரைட் மற்றும் லைவ்லி பின்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இளம் தலைமுறையினரின் கற்பனை திறன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிறங்கள் இளைஞர்களை பெருமளவில் கவரும் என்று டெக்னோ பிரான்டு எதிர்பார்க்கிறது.

     

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்:

    6.8 இன்ச், 1080x2460 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்

    16 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா

    32MP செல்பி கேமரா

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒஎஸ் 12.6

    4ஜி, ப்ளூடூத், வைபை

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

    • டெக்னோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • 50MP பிரைமரி கேமராவுடன், ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.

    டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஸ்பார்க் சீரிசில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட முதல் மாடல் ஆகும். ஸ்பார்க் 10 ப்ரோ வரிசையில் டெக்னோ அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இது.

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்பார்க் டெக்ஸ்ச்சர் ஸ்டிட்ச், க்ளிட்டரிங் பேக் உள்ளது. இத்துடன் 6.6 இன்ச் HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 12.6 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10-பேண்ட் சப்போர்ட் உடன் 5ஜி கனெக்டிவிட்டி வழங்குகிறது.

     

    மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் HD டாட் 90Hz டிஸ்ப்ளே

    மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்

    ARM மாலிG57 GPU

    8 ஜிபி- 4 ஜிபி LCDDR4X+ 4ஜிபி Mem ஃபியுஷன் ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், PDAF, டூயல் பிளாஷ்லைட்

    8MP செல்ஃபி கேமரா

    டூயல் 5ஜி ஆக்டிவ், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபிளாஷ் சார்ஜர்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடல் இந்திய சந்தையில் மெட்டா பிளாக், மெட்டா வைட் மற்றும் மெட்டா புளூ என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது.

    டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #CamoniClick2



    ஹாங் காங்கை சேர்ந்த டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    டெக்னோ கேமான் ஐகிளிக் 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 19:9 சூப்பர் ஃபுல் வியூ நாட்ச் டிஸ்ப்ளே, 24 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    டெக்னோ கேமான் ஐகிளிக் 2 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. அழகிய செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி். செல்ஃபி கேமரா, 1.8um பிக்சல், f/2.0 மற்றும் முன்பக்க ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஏ.ஐ. பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபிக்கள் அதிக இயற்கையாக காட்சியளிக்கும்.

    பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போக்கெ மற்றும் சூப்பர் பிக்சல் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    டெக்னோ கேமான் ஐகிளிக் 2 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1500x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட 3D பேக் கவர்
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
    - 4 ஜி.பி. DDR4 ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹை ஓ.எஸ். 4.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.8um பிக்சல், f/2.0
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத்
    - 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    டெக்னோ கேமான் ஐகிளிக் 2 ஸ்மார்ட்போன் அக்வா புளு, ஹவாய் புளு மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் ஐகிளிக் 2 விலை ரூ.13,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த வாரம் துவங்குகிறது. பயனர்கள் ஐகிளிக் 2 ஸ்மார்ட்போனினை இந்தியா முழுக்க சுமார் 35,000-க்கும் அதிக விற்பனையகங்களில் வாங்க முடியும். #CamoniClick2 #smartphone
    ×