search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudhamalli"

    • நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்.
    • முன்விரோதம் காரணமாக கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சங்குமணி (28) என்பவரும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் சேர்ந்து பத்மநாதனை வெட்டியது தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் பத்மநாதன். இவர் டவுனில் ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு பத்மநாதன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 3 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    படுகாயம் அடைந்த பத்மநாதனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முன்விரோதம் காரணமாக கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சங்குமணி (28) என்பவரும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் சேர்ந்து பத்மநாதனை வெட்டியது தெரிய வந்தது.

    அதன் பேரில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×