என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Samsung Galaxy M32"
- சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் வருகிறது.
- 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M32 மாடல் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் வருகிறது.
அறிமுகமானபோது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999-க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 14 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், குவாட் கேமரா செட் அப், 20MP செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.