search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rettiyarpatti Narayanan"

    • பாளையங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் அ.தி.மு.க. கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
    • அப்போது அ.தி.முக. மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

    நெல்லை:

    அ.தி.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 51-வது ஆண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டியார்பட்டி, அரிய குளம், சீவலப்பேரி, கிருஷ்ணாபுரம், பகுதிகளில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் அ.தி.மு.க. கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது அ.தி.முக. மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதில் பாளை ஒன்றிய கழக செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், ரெட்டியார்பட்டி ஊராட்சி முன்னாள் செயலாளர் மணி பிள்ளை, கீழநத்தம் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, கீழநத்தம் இளைஞர் பாசறை செயலாளர் குமார், திருவேங்கடநாதபுரம் முன்னாள் ஊராட்சி செயலாளர் மாரிச் செல்வம், அரியகுளம் ஊராட்சி கழக முன்னாள் செயலாளர் ரவி, அரியகுளம் கிளை செயலாளர் செல்வராஜ், கிளைக் செயலாளர்கள் ரெட்டியார்பட்டி லட்சுமணன், சொக்கலிங்கம், பேச்சிமுத்து, முருகேசன், கொடிக்குளம் மாரியப்பன், கண்ணன், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×