search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panasonic"

    பானாசோனிக் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    பானாசோனிக் நிறுவனத்தின் புதிய P90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    பானாசோனிக் P90 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், குவாட்கோர் மீடியாடெக் MT6737 சிப்செட், 1 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கெண்டு இயங்குகிறது. 

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. பானாசோனிக் P90 ஸ்மார்ட்போன் 2400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    பானாசோனிக் P90 சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி 2.5D வளைந்த் கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 64-பிட் பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம்
    - 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2400 எம்ஏஹெச் பேட்டரி

    பானாசோனிக் P90 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் பானாசோனிக் P90 விலை ரூ.5,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×