search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan blast"

    • பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்நிலையத்திற்குள் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    உயிரிழந்தோரில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்புத்துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்றும், அந்தக் கட்டிடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் ஹயாத் கூறியுள்ளார். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்

    • பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், சாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த, நவாப் அக்பர் புக்டி ஸ்டேடியத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பாபர் ஆசம், சாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பாக அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் விளையாடவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கண்காட்சி போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் இடையேயான கண்காட்சி போட்டி நடைபெற்றது. குவெட்டா மைதானமும் சூப்பர் லீக் அந்தஸ்தைப் பெற வேண்டும் என பலுசிஸ்தான் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    குண்டுவெடிப்பு நடந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போட்டி நிறுத்தப்பட்டு, வீரர்கள் சிறிது நேரம் அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும் போட்டி மீண்டும் தொடங்கியது

    பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், கடந்த பல ஆண்டுகளாக பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சூபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் போலீசார் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். #PakistanBlast
    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் 2-வது பெரிய நகரமான லாகூர் நகர் கிழக்கு பகுதியில் உலகப்புகழ் பெற்ற டேட்டா தர்பார் மசூதி அமைந்துள்ளது.

    இந்த மசூதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தொழுகை செய்வதற்கு வசதி உள்ளது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த மசூதியில் பெண்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் காலம் நேற்று தொடங்கியது. இன்று அதிகாலை 2-வது நாளாக ரம்ஜான் நோன்பு தொழுகைகள் அந்த டேட்டா தர்பார் மசூதியில் நடந்தது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருக்கும் அந்த மசூதி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அதையும் மீறி இன்று காலை 8.45 மணிக்கு அந்த மசூதி முன்பு 2-ம் எண் கேட் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த அந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி போலீஸ் டி.ஐ.ஜி. அஸ்பக் அகமதுகான் கூறுகையில், “பெண்கள் நுழைவு வாயில் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. போலீஸ் வாகனங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்” என்றனர்.


    இதற்கிடையே குண்டு வெடிப்பை நடத்தியது தற்கொலை படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது. அவன் எந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு இந்த மசூதியில் தற்கொலை தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினார்கள். அப்போது 40 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து அந்த மசூதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் பாதுகாப்பை மீறி பயங்கரவாதிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள பழமையான சுபி வழிபாட்டு தலங்களில் இந்த வழிபாட்டு தலம் மிக மிக புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டு தலத்தை சீல் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தர அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆனால் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
    பாகிஸ்தானில் முத்தாஹிதா இ அமால் கட்சியின் வேட்பாளரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். #PakistanBlast #BlastNearMMARally
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின்போது பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. பட்டியலில் உள்ள தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானியும் ஒருவர்.

    இந்நிலையில், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் அக்ரம் கான் துர்ரானி இன்று காலை பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, பன்னு நகரில் அவரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வாகன அணி வகுப்பிற்கு மிக அருகாமையில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் துர்ரானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    முன்னாள் பிரதமர் அப்பாசி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துர்ரானி, வரும் தேர்தலில் முத்தாஹிதா இ அமால் கட்சி சார்பில் பன்னு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் போட்டியிடுகிறார். #PakistanBlast #BlastNearMMARally 
    ×