search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvSCO"

    டி20 உலக கோப்பையில், தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 
    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஸ்காட்லாந்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டி20 உலகக் கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு 190 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயித்துள்ளது.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் களமிறங்கினர். ரிஸ்வான் 15 ரன்களில் வெளியேறினார். பாபர் ஆசம் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    மறுமுனையில் அவருடன் இணைந்த பக்கர் ஜமாம் 8 ரன்களிலும், முகமது ஹபீஸ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    பாபர் ஆசம்

    தொடர்ந்து ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த பாபர் ஆசம், அரை சதம் கடந்தார். அவர் 47 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட சோயிப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் மிக விரைவாக அரை சதம் கடந்தார். 

    இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 54 ரன்களுடனும், ஆசிப் அலி 5 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது.

    பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
    ×