search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operation of special buses"

    • பெங்களூருக்கு -5, திருச்சிக்கு - 5 என இயக்கப்பட உள்ளது
    • சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ஆயூதபூஜை விஜயதசமி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் பொது மக்கள் வசதிக்காக சென்னை பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    வேலூருக்கு-50 பஸ்கள், ஆற்காடு 10 பஸ்கள், ஓசூர்- 10 பஸ்கள், தர்மபுரி- 5 பஸ்கள், குடியாத்தம்-10, திருப்பத்தூர்-20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதேப்போல் வேலூரிலிருந்து பெங்களூருக்கு -5 பஸ்கள், திருச்சிக்கு - 5 பஸ்கள் என இயக்கப்பட உள்ளது.

    மேலும் வருகின்ற 24 மற்றும் 25-ந்தேதிகளில் பொதுமக்கள் சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு ஏதுவாக வேலூரிலிருந்து, சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்பட பல திரு விழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். இதை தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வைகாசி மாத அமாவாசை வருகிறது.

    சிறப்பு பஸ்கள்

    இதையொட்டி சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர், தர்மபுரி ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நட வடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.
    • குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.

    குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    இங்கு வருகிற 22-ம் தேதி யுகாதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாதேஸ்வரன் சாமிக்கு தைலா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் சேலம் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ மணிகண்டன் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    22-ந் தேதி யுகாதியன்று, காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை பெரிய தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே மாதேஸ்வர மலை கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    இதையொட்டி மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு செல்ல கர்நாடக மாநில சிறப்பு பஸ்களும், தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும், மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. 

    • முருகன் கோவில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக, அரசுப் போக்குரவத்துக்கழக சேலம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நாளை (5-ந் தேதி), தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் சேலத்தில் இருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் இருந்து கபிலர்ம லைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மேலாண் இயக்குனர் தகவல்
    • வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட்., மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2022-ஐ முன்னிட்டு 28.08.2022 முதல் 09.09.2022 வரை சென்னை, திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும்,

    அதே போன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் 28.082022 முதல் 09.09.2022 வரை இரவு, பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்). சார்பாக இயக்கப்பட உள்ளது.

    மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.

    எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×