search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motor Vehicle Bill"

    கோரிக்கைககளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் கோவையில் டாக்சி, ஆட்டோ நாளை ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) பொது செயலாளர் ரபீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் வசூலை கைவிட வேண்டும். இன்ஸ்சூரன்ஸ் பெயரில் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (7-ந் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

    இதில் கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) பங்கேற்கிறது. நாளை காலை 10 மணிக்கு கோவை டவுன் ஹால் பகுதியில் மறியல் போராட்டத்தையும் நடத்த உள்ளோம். நாளை வேலை நிறுத்தத்தின் போது டெம்போ, டாக்சி, வேன், மினிடேர், மேக்சி கேப், டாடாஏசி, ஆட்டோ, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது.

    பள்ளிகளுக்கு இயக்கப்படும் ஆட்டோ, வேன் போன்றவைகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில் ஆட்டோ, கால் டாக்சி உள்பட சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ×