search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Methi Keerai Sambar"

    வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று வெந்தயக்கீரையை சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு,
    துவரம்பருப்பு - ஒரு கப்,
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    துவரம்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.

    வாணலியில் கரைத்த புளியை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

    அடுத்து அதில் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×