search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maha sakthi"

    இந்த ஸ்லோத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது தினமும் சொல்லி வந்தால் குடும்பத்தார் மனதில் உள்ள வேற்றுமைகள் தீர்ந்து, ஒற்றுமையாக வாழலாம்.
    மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
    பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
    வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
    ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
    ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

    பொருள்:

    மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.
    ×