search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love pair arrived"

    • காதல் ஜோடி திருமணம் செய்த முடிவு செய்தபோது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீசில் தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் காரப்பாடு பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் மகள் மோனிஷா. இவருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் காதலாக மாறியது. காதல்ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்தனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்கள் ெபற்றோரை தொடர்பு கொள்ள முயன்றனர். ேமானிஷாவின் பெற்றோர் வர விருப்பம் இல்லை என தெரிவித்ததால் மாப்பிள்ளை வீட்டாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.

    • 2 வருடமாக காதலித்த ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • இருதரப்பினர் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை:

    வடமதுரை அருகே புத்தூர் பூசாரிபட்டியை சேர்ந்தவர் காட்டுராஜா மகன் வெள்ளிமுருகன்(22). இவருக்கும் அய்யலூர் கோம்பை பகுதியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    ஆனால் இதற்கு காட்டுராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வீட்டைவிட்டு காதல்ஜோடி வெளியேறினர். அவர்களை பெற்றோர் தேடி வந்தநிலையில் அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமையில் பொதுமக்கள் காதல்ஜோடியை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    அங்கு இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேஜர் என்பதால் காதல்ஜோடி விருப்பப்படி செல்லலாம். அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என பெற்ேறாரிடம் எழுதி வாங்கினர். அதன்பின்னர் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

    இருதரப்பினர் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×