search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lending"

    • கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.
    • தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கடன்கள் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.

    தனி நபர் கடனாக திட்டம் 1-ன் கீழ் கடன் பெற விரும்பும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கு வேண்டும். திட்டம் 2-ன் கீழ் கடன் பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ரூ. 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ரூ. 30 லட்சம் அதிகபட்சமாக கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 6 முதல் 8 சவீதம் வரை விதிக்கப்படும்.

    சுய உதவிக்குழு கடன் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கல்விக்கடன் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 3 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கைவினைஞர்களுக்கு ரூ. 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு 4 முதல் 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.

    விருப்பமுள்ள சிறுபான்மை சமூகத்தினர், அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கவேண்டும். கடன் மனுக்களுடன், தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது , சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகளை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்த கடன் உதவியை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது. எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது.
    எந்தவித ‘செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது.

    மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...

    தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

    வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

    உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.

    பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

    தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    பெரு நகரங்களில் வில்லா அல்லது அடுக்கு மாடி வீடு வாங்க அவர்கள் முடிவு செய்யும் நிலையில் வங்கி கடன் என்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
    இன்றைய இளம் தலைமுறையினர் (Millennial) பணி வாய்ப்புகள் மற்றும் தொழில் நிலவரம் ஆகியவற்றில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடன் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பதாக பல்வேறு ரியல் எஸ்டேட் கள ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. பெரு நகரங்களில் வில்லா அல்லது அடுக்கு மாடி வீடு வாங்க அவர்கள் முடிவு செய்யும் நிலையில் வங்கி கடன் என்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

    தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பல திட்டங்களின் மூலம் வீடு வாங்குபவர்களுக்கான பல சலுகைகள் நடைமுறையில் உள்ளன. வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் எளிமையான நடைமுறைகளில் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றி குறிப்பிட வாய்ப்பு உள்ளது. அவற்றில் கவனிக்கத்தக்க இரு வகை கடன் திட்டங்கள் பற்றி ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் தெரிவிப்பதாவது :

    * முதலாவது, கடன் பெற்ற முதல் ஒரு சில வருட காலகட்டத்திற்கு குறைவான மாதாந்திர தவணைகளை செலுத்தும் வகையில் உள்ள ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும். இது ‘சர்ப்‘ (SURF-Step Up Repayment Facility) கடன் திட்டம் என்றும் சொல்லப்படும்.

    * இரண்டாவது கடன் திட்டமானது ஏற்கெனவே வங்கியில் வீட்டு கடன் பெற்று திருப்பி செலுத்தி வரும் நிலையில், வீடு விரிவாக்கம் அல்லது உள் கட்டமைப்பு மாற்றம் ஆகிய காரணங்களுக்காக பெறக்கூடிய ‘டாப் அப் லோன்’ (Top-Up Loan) ஆகும்.

    ‘ஸ்டெப் அப் லோன்’

    சொந்தமாக வீடு வாங்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மாதாந்திர தவணை தொகை சுமையாக அமையாமல், இந்த திட்டத்தில் முதல் சில வருடங்களுக்கு இ.எம்.ஐ தொகையை குறைவாக கணக்கிடப்படும். பின்னர், காலப்போக்கில் பதவி உயர்வு மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றுக்கேற்ப மாதாந்திர தவணை தொகையை அதிகமாக திருப்பி செலுத்தலாம்.

    ஒப்பீட்டு நோக்கில் கவனிக்கும்போது தற்போது வழங்கப்படும் வீட்டு கடன்களில், இவ்வகை திட்டத்தின் மாத தவணைகள் அதிகமாக இருப்பதுடன், கடனை திருப்பிச் செலுத்தும் காலமும் நீண்டதாக இருக்கும். அதாவது, தொடக்க ஆண்டுகளில் மாத தவணை குறைவாகவும், குறிப்பிட்ட காலம் சென்ற பின்னர் தவணை தொகையை அதிகமாகவும் திருப்பி செலுத்த இயலும்.

    தவணை தொகை அதிகரிப்பு எவ்வளவு என்பதை, கடன் பெற்றவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வருமான உயர்வுகளை பொறுத்து முடிவு செய்யப்படும். கடனுக்கான கால அவகாசத்தை கடன் பெறுபவரின் வயது, கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் அல்லது வீட்டு கடன் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இவ்வகை கடன் திட்டம் இளம் வயதினருக்கு நல்ல வாய்ப்பு என்பது பலரது கருத்தாகும்.

    ‘டாப் அப் லோன்’

    ஏற்கெனவே வீட்டு கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தி வரும் நிலையில் கூடுதலாக கடன் பெறும் வாய்ப்பை அளிப்பது டாப் அப் லோன் திட்டம் ஆகும். இதன் மூலம் வீட்டை புதுப்பித்தல், வீடு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் பெறலாம். தனி நபர் கடனுடன் ஒப்பிடும்போது இவ்வகை கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதையும் நிதி ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

    இந்த திட்டத்தில் அளிக்கப்படும் கடன் தொகை அளவை, கடன் பெற்றவர் முந்தைய தவணைகளை திருப்பிய செலுத்திய விதம், கடன் மதிப்பு விகிதம், திருப்பி செலுத்தும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக, ‘டாப் அப் கடன்’ பிரதான கடனுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கடனாக கருதப்படும். இதற்கென தனியாக கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். மேலும், இவ்வகை கடன்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.

    இவ்வகை கடனை வாங்குபவர், கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ற நிலையில் ஆவணங்கள் அளிக்கவேண்டிய செயல்முறைகள் குறைவாக இருக்கும். கடன் விண்ணப்பமும் குறைவான காலகட்டத்திலேயே எளிதில் செயலாக்கம் பெற்றுவிடும்.
    ×