search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidnappers"

    உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் மகனை கடத்திய கடத்தல்காரர்கள், பணம் வராத ஆத்திரத்தில், 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Sultanpur #Kidnappers #kill6yearoldboy #Abductingforransom
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டனர். மகன்கள் வீடு திரும்பாததை அறிந்த ராகேஷ் விசாரித்தார். அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். 

    சிறிது நேரத்தில் ராகேஷுக்கு கடத்தல்காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில், மகன்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் 50 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டினர்.

    இதையடுத்து, கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தது. பணம் வராத ஆத்திரத்தில் கடத்தல்காரர்கள் அவரது மகன்களை உயிருடன் கொளுத்தினர். இதில் பிரியனேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். திவ்யனேஷ் படுகாயம் அடைந்தான்.

    ராகேஷுக்கு வந்த போன் அழைப்பை வைத்து போலீசார் கடத்தல்காரர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்க்ளை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். அதன்பின் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட திவ்யனேஷ், லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    விசாரணையில், ஹரிஓம், ரகுவர், ஷிவ்புஜன் மற்றும் சூரஜ் ஆகிய 4 பேர் கடத்தல்காரகள் என்பதும், அவர்களில் ரகுவர் ராகேஷ் வீட்டு வேலையாள் என்பதும், சிறுவர்களை கடத்தி பணம் பறிப்பதற்கு முக்கிய காரணமாகவும் அவன் இருந்தான் என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சிறுவன் பிரியனேஷ் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    50 லட்சம் ரூபாய் பணம் தராததால் கடத்தப்பட்ட 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. #Sultanpur #Kidnappers #kill6yearoldboy #Abductingforransom
    ×