search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kia Motors"

    தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட பேட்டரி கார் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. #electricvehicles



    தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் காரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. ‘சோல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த காரின் தயாரிப்பு பணிகள் 2019 வாக்கில் துவங்கவுள்ளது. 

    இந்நிறுவனம் ஏற்கனவே ‘இநிரோ’ என்ற பெயரில் பேட்டரி கார்களை தயாரித்துள்ளது. இந்த மாடல் காரை விட சோல் மேம்பட்ட ரகமாக உருவாகி இருக்கிறது. இதன் பேட்டரி 204 ஹெச்.பி. திறனையும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலான இநிரோ 100 கி.மீ. வேகத்தை 7.8 விநாடிகளில் எட்டியது. அதை விட இந்தக் கார் அதி விரைவாகச் செல்லும்.

    கியா சோல் மாடலில் வழங்கப்பட்டுள்ள 64 கிலோவாட் பேட்டரி இந்தக் காருக்கு கூடுதல் திறனை அளிக்கிறது. இதுவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 485 கி.மீ. தூரம் வரை ஓடும் என தெரிகிறது. மூன்றாம் தலைமுறையாக கியா நிறுவனத்தின் ‘சோல்’ மாடல் கார்கள் வந்துள்ளது. இதன் வடிவமைப்பில் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் பெருமளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



    அதிலும் குறிப்பாக பின்புறத்தில் உள்ள விளக்குகள் மிக நேர்த்தியாக உள்ளன. மேலும் காரை சார்ஜ் செய்யும் போர்ட் முன்புற பம்பரில் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. காருக்கு 17 இன்ச் ஸ்போக் வீல் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. சொகுசான பயணத்துக்கு இதில் மிகச் சிறப்பான சஸ்பென்ஷன் தரப்பட்டுள்ளது. நான்கு விதமான டிரைவிங் வசதிகள் இதில் உள்ளன.

    இதன் முன்பகுதியில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் சிறப்பான பொழுது போக்கு அம்சங்களை அளிக்கிறது. வழக்கமான காரில் உள்ளதைப் போன்று ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, குரல் வழி செயல்பாடு, டயல் அமைப்பு போன்று கியர் தேர்வு வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 



    இதில் யு.வி.ஓ. டெலிமேட்டிக்ஸ் சிஸ்டம் உள்ளது. இதன் மூலம் கார் பற்றிய தகவலை ஸ்மார்ட்போன் மூலம் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் கியா மோட்டார்ஸ். இந்நிறுவனமும் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் ஆலை அமைத்து வருகிறது. 

    விரைவில் இந்நிறுவன கார்களும் இந்திய சாலைகளில் வலம் வர உள்ளன. மத்திய அரசு பேட்டரி கார்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில் கியா மோட்டார்ஸின் ‘சோல்’ இந்திய சாலைகளில் விரைவில் வலம் வரும் எனலாம்.
    இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் கியா கார்னிவல் சோதனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மல்டி-பர்ப்பஸ் வாகனமான கியா கிரான்ட் கார்னிவல் குர்கிராமில் சோதனை செய்யப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக இருக்கும் புதிய MPV மாடல் இணையத்தில் கசிந்துள்ளது.

    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட பெரியதாக இருக்கும் கிரான்ட் கார்னிவல் 7, 8 மற்றும் 11 இருக்கைகளை கொண்ட ஆப்ஷன்களில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக இடவசதி கொண்டிருப்பதோடு பிரீமியமாகவும் இருக்கிறது. 
    இந்தியாவில் கியா கிரான்ட் கார்னிவல் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு அடுத்த நிலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி gaadiwaadi.com

    கியா கிரான்ட் கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 199 பிஹெச்பி @3800 ஆர்பிஎம் மற்றும் 441 என்எம் டார்கியூ @1750-2750 ஆர்பிஎம் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் 3.3 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் நிலையில், கியா தனது கிரான்ட் கார்னிவல் மாடலில் பொருத்த இன்ஜின்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்திய சந்தைக்கு ஏற்ற கிரான்ட் கார்னிவல் மாடலை மதிப்பிடும் பணிகளில் கியா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×