search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khel Ratna Award"

    • கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
    • செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.

    இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய விருது வழங்கும் விழா இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்ற அவனி லெகாரா
     
    இதேபோல் மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை (துப்பாக்கி சுடும் போட்டி) அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில் ஆகியோரும் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றனர்.
    கேல் ரத்னா விருது ஒரே ஆண்டில் இரட்டை இலக்கை எண்ணிக்கையில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

    இதில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ரவிக்குமார் (மல்யுத்தம்), லவ்லினா (குத்துச்சண்டை), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிச் சுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) சேர்த்து 12 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ×