search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kendriya Vidyalaya"

    • நாடு முழுவதும் 1,250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 பள்ளிகளும் இயங்குகின்றன.
    • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.வி.எஸ்-ஐ "ஆலமரம்" என்று குறிப்பிட்டார்.

    நாடு முழுவதும் 1,250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் கேவிஎஸ் நடத்தும் மூன்று பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வைர விழாவையொட்டி, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    மேலும், "பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முக்கிய பங்காற்றியுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேந்திரிய வித்யாலயா குடும்பத்தின் அனைத்து மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும் வைர விழாவையொட்டி வாழ்த்துக்கள். இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.

    பல ஆண்டுகளாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.வி.எஸ்-ஐ "ஆலமரம்" என்று குறிப்பிட்டார்.

    இதுகுறித்து மேலும் அவர், "கடந்த ஆறு சதாப்தங்களாக மாணவர்களுக்கு தரமான கல்வியை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வழங்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த "ஆலமரம்" முக்கிய காரணியாக உள்ளது. இன்று நாம் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் போது கேவிஎஸ்-ன் பங்கு முக்கியமானதாகிறது.

    கேவிஎஸ் குடும்பம் 21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப கல்வி மூலம் எதிர்காலம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும். மேலும் என்இபி (தேசிய கல்விக் கொள்கை) தரையில் செயல்படுத்தப்படுவதற்கு பங்களிக்கட்டும்" என்றார்.

    ×