search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jorhat"

    அசாம் மாநிலம் ஜோர்காட் மாவட்டத்தில் உறவினர்கள் இல்லாததால் ஏழையின் உடலை காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடுகாட்டுக்கு பாடையில் சுமந்து சென்றார். #RupjyotiKurmi
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் ஜோர் காட் மாவட்டத்தில் எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்தவர் திலீப் டே (50). மிகவும் ஏழையான அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு உடல் ஊனமுற்ற உறவினர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

    எனவே இறுதிச்சடங்குக்காக சுடுகாட்டுக்கு தூக்கி செல்ல என்ன செய்வது என்று அவர் தவித்துக் கொண்டிருந்தார். இந்த தகவல் அண்டை வீட்டுக்காரரான ரூபம் கோகய் என்ற வர்த்தகருக்கு தெரியவந்தது.

    அவர் ஜோர்காட் தொகுதி எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி (40) என்பவரிடம் தெரிவித்தார். உடனே அங்கு எம்.எல்.ஏ. குர்மி வந்துவிட்டார். உடல் ஊனமுற்ற உறவினருடன் சேர்ந்து இறந்த திலீப்டேவுக்கு இறுதி சடங்கு மேற்கொண்டார்.

    பின்னர் அவரது உடலை மூங்கில் பாடையில் கிடத்தி சுடுகாட்டுக்கு சுமந்து சென்றார். இறுதி வரை இருந்து திலீப்டேவின் இறுதி சடங்கை எந்த குறையும் இன்றி முடித்து வைத்தார். அதே நேரத்தில் அப்பகுதி ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரின் தாயார் இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்கிலும் இவர் கலந்துகொண்டார்.

    எம்.எல்.ஏ. குர்மியின் இந்த மனிதாபிமான செயலை ஜோர்காட் தொகுதி மக்கள் பாராட்டினார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூப் ஜோதி குர்மி ஜோர்காட் தொகுதியில் தொடர்ந்து 3 தடவை வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்து வருகிறார்.


    முதன்முறையாக 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இதற்கு முன்பு இத்தொகுதி எம்.எல்.ஏ. ஆக குர்மியின் தாயார் ரூபம் குர்மி பதவி வகித்தார். மனிதாபிமனம் மிக்க எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி கடந்த 2017-ம்ஆண்டு ஜூலையில் அசாமில் பலத்த மழைபெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது உதவினார்.

    காசிரங்கா தேசிய பூங்கா பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. அப்போது அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட குர்மி தனது முதுகில் 50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையை சுமந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். #RupjyotiKurmi
    ×