search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery and money"

    • வீட்டின் பூட்டை உடைத்து சூட்கேசில் வைத்திருந்த 7 பவுன் தங்கநகை, ரூ.12ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வசித்து வருபவர் சரோஜா(57). இவரது கணவர் சிதம்பரம் இறந்துவிட்டார்.

    சம்பவத்தன்று கொடைக்கானல் மன்னவனூரில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். மீண்டும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது சூட்கேசில் வைத்திருந்த 7 பவுன் தங்கநகை, ரூ.12ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் சரோஜா புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.50ஆயிரம ரொக்கம் மற்றும் 4 பவுன் நகை கொள்ளைபோனது.
    • மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வந்தும் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிலுவத்தூர் பனைமரத்துப் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 72). இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாத்திமாமேரி. இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ேஜம்ஸ்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளேசென்று பார்த்த போது 4 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் பரமசிவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வந்தும் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

    ×