search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai i30"

    தென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.




    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்தியாவில் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை சோதனை செய்து வருகிறது. பூனே அருகே சோதனை செய்யப்படும் i30 மாடல் புகை மாசு சோதனை செய்யப்படுவது புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.

    சோதனை செய்யப்படும் i30 காரின் பின்புறம் எரிபொருள் மாசு சோதனை செய்யும் சாதனம் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்சமயம் மேற்கொள்ளப்படும் சோதனைகளைத் தொடர்ந்து i30 கார் இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் அறிமுகம் செய்வது குறித்து ஹூன்டாய் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இந்தியாவில் புதிய i30 கார் ஹூன்டாய் i20 எலைட் மற்றும் கிரெட்டா எஸ்யுவி மாடல்களுக்கு இடையில் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய ஹேட்சேபக் நான்கு மீட்டர்கள் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.



    ஹூன்டாய் i30 மாடலில் ஃப்ளியூடிக் டிசைன் ஸ்கல்ப்ச்சர் 2.0 வடிவமைப்பு மற்றும் புதிய ஹெக்சாகோனல் கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள், ரூஃப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் ஸ்ப்லிட் எல்இடி டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்படுகின்றன.

    தற்சமயம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் யூரோ VI எமிஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தியாவில் ஹூன்டாய் i30 மாடலில் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதே இன்ஜின் ஹூன்டாய் வெர்னா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹூன்டாய் i30 ஹேட்ச்பேக் மாடலில் பல்வேறு சவுகரிய மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வரை இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்கள் வெளியாக நிலையில் i30 மாடலுக்கு எவ்வித போட்டியும் இருக்காது என கூறப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி autocarindia.com
    ×