search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Bus Conductor Suspended"

    • புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளதால், போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள்.
    • பள்ளி, கல்லூரி நேரங்களில் தமிழக அரசு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்திலிருந்து பள்ளி மாணவிகள் ஏராளமானோர் அருகிலுள்ள தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்குச் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்து ஆலங்குடியை சேர்ந்த நடத்துனர் சுப்பிரமணி, கூட்ட நெருக்கடியால் படியில் நின்றவாறு பயணம் செய்த பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவிகள் குளத்தூர்நாயக்கர் பட்டியில் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பேருந்து முன்பாக சாலையில் அமர்ந்து நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசிய நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே பிரச்சினை தொடர்பாக புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.

    அதில் நடத்துனர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடத்துனர் சுப்பிரமணியை சஸ்பெண்டு செய்து அதிகாரி உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்டு காலம் முடிந்ததும் அவரை பணியிட மாற்றம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளதால், போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள். எனவே பள்ளி, கல்லூரி நேரங்களில் தமிழக அரசு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    3 பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் தராதது மற்றும் மதுபோதையில் பணியாற்றிய அரசு பஸ் கண்டக்டரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அழகம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). அரசு பஸ் நடத்துனராக உள்ளார்.

    இவர் பணிக்கு செல்லும் போதெல்லாம் குடித்துவிட்டு போதையில் செல்வதாகவும், பஸ் பயணிகளிடம் தகராறு செய்வதாகவும் போக்குவரத்து மேலாளருக்கு அடிக்கடி புகார் வந்தது.

    இந்நிலையில் நேற்று ஆலங்குளம் பஸ் நிலையத்தில் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், வேலாயுதம் ஆகியோர் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது முருகன் பணியாற்றும் பஸ் வந்தது. அதனை நிறுத்தி பயணிகளிடம் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 3 பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முருகன் டிக்கெட் வழங்காமல் இருந்ததும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து முருகனை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரை ‘சஸ்பெண்டு’ செய்து போக்குவத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×