search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gift auction"

    • மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர்.
    • தமிழகத்திலேயே சேலத்தைச் சேர்ந்தவருக்கு தான் இந்த ஆண்டு ஏலம் மூலம் பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அன்னதானப்பட்டி:

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் கந்தசாமி (வயது 50) திருவள்ளுவர் சிலையையும், பட்டு, துண்டு, வேஷ்டிகளையும் ஏலத்தில் எடுத்துள்ளார்.

    தமிழகத்திலேயே சேலத்தைச் சேர்ந்தவருக்கு தான் இந்த ஆண்டு ஏலம் மூலம் பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் ஏலத்தில் எடுத்த இந்தப் பொருட்களை தனியார் நிறுவனத்தில் இருந்து நேரடியாக அவர் இல்லத்திற்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றுள்ளார்கள். இதனையொட்டி அவரை இல்லத்தில் நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் வாழ்த்துக்களையும், நன்றியையும்

    தெரிவித்தார்.

    மேலும் கொரோனா பெருந்தோற்று காலத்தில் பி.எம்.கேர்ஸ் மூலமாக உதவியும், தற்போது பெண் குழந்தைகளின் கல்விக்காக பங்காற்றியும் வரும் கார்த்திகேயனுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் நன்றியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அவருக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட சுமார் 1900 பரிசுப் பொருட்கள் வரும் 27-30 தேதிக்குள் டெல்லியில் ஏலம் விடப்படுகின்றன. #GiftsreceivedbyModi #cleanGangaproject
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவின் 14-வது பிரதமராக 16-5-2014 அன்று நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் அவருக்கு நினைவுப்பரிசாக விலைமதிப்புள்ள பொருட்களை பல பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக அளித்துள்ளனர்.

    ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், மேலங்கிகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட அந்த பரிசுப்பொருட்கள் எல்லாம் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கு வைக்கப்பட்டுள்ள சுமார் 1900 பரிசுப் பொருட்கள் வரும் 27, 28 தேதிகளில் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்படுகின்றன.

    தொடர்ந்து, 29,30 தேதிகளில் இணையதளம் வழியாக ஆன்லைன் ஏலமும் நடைபெறுகிறது. இவ்விரு ஏலங்களில் அதிகமான தொகையை தந்து பொருட்களை வாங்க பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் கிடைக்கும் பணம் பிரதமரின் தூய்மை கங்கா திட்டத்துக்கான நிதி தொகுப்புக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GiftsreceivedbyModi #cleanGangaproject
    ×