search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gayathri raguram"

    • காயத்ரி ரகுராம் சென்னை ‘சைபர் கிரைம்' போலீசாருக்கு ‘ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
    • பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சென்னை 'சைபர் கிரைம்' போலீசாருக்கு 'ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

    அதில் அவர், ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாபு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    அவருடைய புகார் மனுவை 'சைபர் கிரைம்' போலீசார் ஆராய்ந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    • அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

    அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன்.

    அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை.

    உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்.

    அனைத்து ஆதாரங்களை சமர்பித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை.

    தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காயத்ரி ரகுராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன்.

    தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 8 வருட உழைப்பை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும்.

    என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம்.

    ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.

    என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன். கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை. பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன்.

    மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சார்லி சாப்லின், பரசுராம், விசில், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம்.
    • இவர் தற்போது தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

    2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். பின்னர் காயத்ரி ரகுராம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழக பாஜகாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

     

    காயத்ரி ரகுராம்

    காயத்ரி ரகுராம்

    இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    • தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.
    • கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.

    தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    ×