search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French President"

    • எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
    • காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சண்டைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழந்து வருவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின் றன. ஆனாலும் இஸ்ரேல் தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    சண்டை நீடித்து வருவதால் காசா முகாம்களில் உள்ள பொதுமக்கள் உயிர் பயத்தில் இருந்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட எதுவும் சரிவர கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசா நகரமான ரபாவில் தங்கி உள்ளனர். எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

    இங்கிருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ரபாவில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்வது போர் குற்றமாகும், காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தை யும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் வடக்கு காசாவில் மிகப்பெரிய அல்-ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று குருத் தோலை ஞாயிறையொட்டி காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

    • ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.

    லுசைல்:

    கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். 

    ×