search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First- Minister M.K.Stalin should be given an enthusiastic welcome"

    • 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
    • பொதுக்கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர்.

     கோவை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தர உள்ளார். இரவு கோவை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    பொதுக்கூட்டத்தில்

    மறுநாள் 24-ந்தேதி காலையில் ஈச்சனாரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் மாலையில், பொள்ளாச்சியில் நடைபெற உள்ள தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர்.

    தொடர்ந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் 26 -ந்தேதி கோவை வருகிறார். பின்னர் அவர் தனியார் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் காளப்பட்டியில் நடந்தது.

    கூட்டத்தில் கோவை விமான நிலையம் முதல், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் வரை முதல்- அமைச்சர் செல்லும் பாதை முழுவதும், உற்சாக வரவேற்பு அளிப்பது. மாவட்ட வாரியாக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ×