search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female police officers created awareness"

    • குட் டச், பேட் டச்சு குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினர்.
    • அனைத்து பள்ளிகளிலும் 2 பெண் போலீசார் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வடவள்ளி போலீசாரால் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த விழிப்புணர்வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூறப்பட்டது. இதில் போக்சோ, பெண் குழந்தை திருமணம் குறித்த குற்ற செயல்கள் பற்றி மாணவர்களுக்கு போலீசார் எடுத்துரைத்தனர். திருமணத்திற்கு பெண்களுக்கு 18 வயது, ஆண்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் என்பதையும் , குறைந்த வயதில் காதல் திருமணம் செய்தால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்‌ பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர். பிராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டம் கடந்த ஜூன் மாதம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனால் தொடங்கப்பட்டு கோவை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 2 பெண் போலீசார் சென்று வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளும் , 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவிகளுக்கும் என பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சுண்டப்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு பெண் போலீசார் குட் டச், பேட் டச்சு குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினர்.

    ×