search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DDvMP"

    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களும், என் ஜெகதீசன் 43 ரன்களும், ஆர் விவேக் 54 ரன்களும் சேர்த்தனர்.



    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களம் இறங்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் மதுரை பாந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 19.3 ஓவரில் 128 ரன்னில் சுருண்டது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் குவாலிபையர் 1-ல் திண்டுக்கல் - மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #TNPL2018 #DDvMP
    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ‘லீக்’ ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸையும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் 4 விக்கெட்டில் காரைக்குடி காளையையும் தோற்கடித்தன.

    திருச்சி, தூத்துக்குடி அணிகள் பெற்ற வெற்றி எந்த பலனையும் தரவில்லை. ரன்ரேட்டில் அந்த அணிகள் ‘பிளேஆஃப்’ வாய்ப்பை இழந்தன. கோவை கிங்ஸ், காரைக்குடி காளை அணிகள் ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு நுழைந்தன.

    திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட்டில் முன்னிலையில் இருந்ததால் திண்டுக்கல் முதல் இடத்தையும், மதுரை 2-வது இடத்தையும் பிடித்தன.

    கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றன. இதில் கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ரன்ரேட்டில் முன்னிலை பெற்று முறையே 3-வது, 4-வது இடங்களை பிடித்து ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன

    இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆஃப்’ சுற்று நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு ‘குவாலிபையர் 1’ ஆட்டம் தொடங்குகிறது. இதில் முதல் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ்- இரண்டாவது இடத்தை பிடித்த மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். திண்டுக்கல் அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. தோற்கும் அணி வெளியேறாது ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.


    மதுரை பாந்தர்ஸ்

    எலிமினேட்டர் ஆட்டம் 8-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 3-வது இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்- நான்காவது இடத்தை பிடித்த காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    கோவை அணி ‘லீக்’ ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நத்தத்தில் வருகிற 10-ந்தேதியும், இறுதிப் போட்டி சென்னையில் 12-ந்தேதியும் நடக்கிறது.
    ×