search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai high court சென்னை ஐகோர்ட்"

    2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் வருகிற 15-ந் தேதி நேரில் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Thirumavalavan
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 84 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார்.

    இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஓட்டுகளை முறையாக எண்ணவில்லை என்பதால், மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, 2 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு எந்திரம் கோளாறு என்று கூறி பல வாக்காளர்களை ஓட்டுபோட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டி இருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.சீனிவாசராவ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக திருமாவளவன் வருகிற 15-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். #Thirumavalavan
    ×