என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai high court சென்னை ஐகோர்ட்"

    • சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது
    • உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது

    நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    இதனையொட்டி, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, 'கிங்டம்' படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து, தமிழ் மக்களிடம் 'கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம். படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என உறுதியளிக்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில், 'கிங்டம்' படம் திரையிட இடையூறு செய்தால், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அதே நேரத்தில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

    2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் வருகிற 15-ந் தேதி நேரில் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Thirumavalavan
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 84 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார்.

    இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஓட்டுகளை முறையாக எண்ணவில்லை என்பதால், மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, 2 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு எந்திரம் கோளாறு என்று கூறி பல வாக்காளர்களை ஓட்டுபோட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டி இருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.சீனிவாசராவ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக திருமாவளவன் வருகிற 15-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். #Thirumavalavan
    ×