search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullock"

    • தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.

    போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

    • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள விராமதி ஊராட்சியில் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பந்தையை மாடுகளுடன் சாரதிகளும் பங்கேற்றனர். இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, பந்தயம் என 3 பந்தயமாக விராமதியிலிருந்து நெடுமறம் ஊர் எல்லை வரை சென்று திரும்ப வேண்டும் என விழா குழு கமிட்டியிணரால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    3 கட்டங்களாக நடத்த ப்பட்ட எல்கை பந்தயத்தில் பெரிய மாடுகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசினை நல்லாங்குடி அமராவதி புதூர் முத்தையா சேர்வை, வேலு கிருஷ்ணன் அம்பலம் ஆகியோர் பெற்றனர்.2-ம் பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழி கடையும், 3-ம் பரிசை பாஸ்கரன் மகேஸ்வரியும் ,4-ம் பரிசை மாவூர் ஏஆர்.ராமச்சந்திரன் பெற்றனர்.

    நடுமாடு முதல் பரிசு பரளி யாழினி பெரிய கருப்பன், 2-ம் பரிசு நல்லாங்குடி அமராவதி புதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், முத்தையா சேர்வை, 3-ம் பரிசு நெய் வாசல் சாத்தி க்கோட்டை பெரியசாமி கருப்பையா சேர்வை, 4-ம் பரிசு காரைக்குடி மகிழ்மித்திரன் ஆகியோர் பெற்றனர். சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு நல்லாம்பட்டி ஆர்விபி நித்திஷ் மங்கை, 2-ம் பரிசு ஓனாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே அப்துல்லா, ஆர்.ஆர். சின்னம்மாள் வளையவயல், 3-ம் பரிசு கம்பம் வக்கீல் போது ராஜா, கூடலூர் அச்சரம் பட்டி மாதவ கோனார், நான்காம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோர் பெற்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் நடந்த ஆடி திருவிழாவில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு முளைக்கொட்டுதல் நடந்தது. நேற்று காலை கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஆடி திருவிழாவையொட்டி இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேவகோட்டை பிரசாத் மொபைல், 2-வதாக நல்லாங்குடி முத்தையா சேர்வை, 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக சாத்தம்பத்தி சரவணன் மாடுகள் வெற்றி பெற்றன.சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது காரைக்குடி கருப்பண்ண சேர்வை, 2-வதாக சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, 3-வதாக கண்டதேவி மருதுபிரதர்ஸ், 4-வதாக மயிலாடுவயல் செல்வராஜ் எஸ்.பி.பட்டணம் உமர் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை, வேட்டி, துண்டுகள், ரொக்க பரிசுகள், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்.

    ×