search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashutosh Rana"

    பி.வெற்றிசெல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜானி' படத்தின் விமர்சனம். #JohnnyReview #Prashanth #SanchitaShetty
    பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்த பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.



    பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.

    கடைசியில், பிரசாந்த் தனது கூட்டாளிகளிடம் சிக்கினாரா? சஞ்சிதா ஷெட்டியை காப்பாற்றினாரா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ் கதாபாத்திரம் மற்றும் அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் வில்லத்தமான கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

    2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’ படத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.வெற்றிசெல்வன். ஆக்‌ஷன், அதிரடி, காமெடி, காதல் என கதைக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. எனினும் படத்தின் தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.



    ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஜானி' த்ரில்லர் ஜர்னி. #JohnnyReview #Prashanth #SanchitaShetty

    கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். #AndreaJeremiah
    பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புதிய படத்தை ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்.

    கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். ஜேகே, அசுதோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    ஆக்‌ஷன், திரில்லர் கலந்த பேண்டஸி படமாக உருவாகும் இந்த இதில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் சத்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.



    சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்), ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #AndreaJeremiah

    ×