search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air Rifle"

    ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது
    பாகு:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.  

    மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 

    2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது. 

    இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17-5 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

    ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்‌ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்திய  அணி வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவியது.

     
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் தீபக் குமார், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #DeepakKumar
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ரவிக் குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச்சுற்றில் 247.7 புள்ளிகள் பெற்றார்.

    இப்பிரிவில் சீன வீரர் யங் ஹோரன் 249.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். தைவான் வீரர் லு ஷாவோசுவான் மூடுன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். ரவிக்குமார் 4-வது இடத்தைப் பிடித்தார். #AsianGames2018 #DeepakKumar
    ×