search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional DGP"

    • கோவையில் 4 மாவட்ட போலீசாருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை தாங்கினார்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.

    குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது. வழக்குகள் சம்பந்தமான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்வது. ரவுடிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்துவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

    பிரதமர் மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார். இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், என்னென்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆலோசித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கோவை, திருப்பூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணிபுரிந்து வரும் போலீசாரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை காக்க வைக்க கூடாது. அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்ததும், என்ன பிரச்சினை என கேட்டு அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். குறைகளை கேட்டு உடனே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வரும் மக்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணியாற்றும் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    ×