search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Jaya prada"

    பிரபல நடிகை ஜெயப்பிரதா ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இன்று இணைந்தார். #JayaPrada #BJP
    புதுடெல்லி:

    பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

    சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.

    அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார்.



    ஆனால் அவருக்கும் அவருக்கு நெருக்கமான அமர்சிங்குக்கும் பெரிய அளவில் அந்த கட்சியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஜெயப்பிரதா நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

    அசம்கானும், ஜெயப்பிரதாவும் அரசியல் ரீதியாக பரம எதிரிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #JayaPrada #BJP
    ×