search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 thousand 560"

    • மேட்டூர் அணை பூங்காவை ஒரே நாளில் 8 ஆயிரத்து 560 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர் பார்வையாளர் கட்டணமாக ரூ.46 ஆயிரம் வசூலானது.
    • கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை பூங்காவில் நேற்று காலை முதலே சுற்று லா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்தும் மேட்டூர் அணைப் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அணையைப் பார்வையிட்ட பொதுமக்கள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.

    அணைக்கட்டு முனியப்பனுக்கு வேண்டுதல் வைத்த பொதுமக்கள் ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். குடும்பத்துடன் அணைப் பூங்காவுக்கு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனர்.மீன் கடைகளில் மீன்களை வாங்கி சமைத்து சுவைத்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் வருகையால் மீன் வியாபாரம் அதிகரித்தது. மீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ைண, மான் பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர். சிறியவர்களுடன் பெரியவர்களும் ஊஞ்சலாடி சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக நிழல் தரும் மரத்தின் அடியிலும் புல் தரையிலும் அமர்ந்து பொழுதை கழித்தனர்.

    மேட்டூர் அணைப் பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 8,560 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதன்மூலம் நுழைவுக் கட்டணமாக ரூ.42 ஆயிரத்து 800 வசூலானது. மேட்டூர் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 643 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதன்மூலம் ரூ.3,215 பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் ரூ.46 ஆயிரம் வசூலானது. கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×