search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 Suzuki Access 125"

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் 2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது. #Suzuki #SuzukiAccess125



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2019 அக்சஸ் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 2019 சுசுகி அக்சஸ் ஸ்கூட்டரில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் துவக்க விலை ரூ.56,667 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சி.பி.எஸ். வசதியில்லாத மாடலை விட ரூ.690 அதிகம் ஆகும்.

    சி.பி.எஸ். வசதியை தவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித கூடுதல் அம்சங்களும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் சி.பி.எஸ். இல்லாத ஸ்கூட்டரின் விலை ரூ.55,977 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் சுசுகி அக்சஸ் 125 அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எளிய வடிவமைப்புடன் சுசுகி அக்சஸ் 125 ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 



    இத்துடன் அலாய் வீல்கள், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒன்-புஷ் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்பக்க பாக்கெட், சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 5.6 லிட்டர் எரிபொருள் கொள்ளலவு கொண்டிருக்கும் சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது. 

    2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் முந்தைய மாடலில் உள்ளதை போன்று 125 சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
    ×