search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suzuki Motorcycle"

    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Suzuki



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 GSX S750 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிள் விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் மேட் பிளாக் மற்றும் பியல் கிளேசியர் வைட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு நிறங்களிலும் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே மோட்டார்சைக்கிள் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் இந்தியாவிலும் இது கிடைக்கிறது.



    காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிளில் 749 சிசி இன்-லைன், 4-சிலிண்டர், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 81 என்எம் டார்கியூ @9000 ஆர்.பி.எம்.-இல் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க்களும், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் ஏ.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இவைதவிர 2019 சுசுகி GSX S750 மாடலில் 3-மோட் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆர்.பி.எம். அசிஸ்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் 2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது. #Suzuki #SuzukiAccess125



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2019 அக்சஸ் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 2019 சுசுகி அக்சஸ் ஸ்கூட்டரில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் துவக்க விலை ரூ.56,667 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சி.பி.எஸ். வசதியில்லாத மாடலை விட ரூ.690 அதிகம் ஆகும்.

    சி.பி.எஸ். வசதியை தவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித கூடுதல் அம்சங்களும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் சி.பி.எஸ். இல்லாத ஸ்கூட்டரின் விலை ரூ.55,977 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் சுசுகி அக்சஸ் 125 அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எளிய வடிவமைப்புடன் சுசுகி அக்சஸ் 125 ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 



    இத்துடன் அலாய் வீல்கள், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒன்-புஷ் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்பக்க பாக்கெட், சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 5.6 லிட்டர் எரிபொருள் கொள்ளலவு கொண்டிருக்கும் சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது. 

    2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் முந்தைய மாடலில் உள்ளதை போன்று 125 சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 2019 வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #SUZUKI #motorcycle



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா தனது 2019 வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2019 மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனினும், 2019 மாடலில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் ஹசார்டு லைட்கள் மற்றும் சைடு ரிஃப்ளெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிள் சாம்பியன் எல்லோ மற்றும் பியல் வைட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. 

    வடிவமைப்பை பொருத்தவரை புதிய வி ஸ்டாம் 650XT மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. சுசுகி வி ஸ்டாம் 650XT இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது. 2019 வி ஸ்டாம் 650XT மாடல் மூன்று விதங்களில் உயரத்தை மாற்றக்கூடிய விண்ட்ஸ்கிரீன், ஈசி-ஸ்டார்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 3-ஸ்டேஜ் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.



    2019 சுசுகி வி ஸ்டாம் 650XT மோட்டார்சைக்கிளில் 6445சிசி வி-ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர், 62.3 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 260 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. டிஸ்க் பிரேக்களுடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 24 சதவகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #suzuki



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் நவம்பர் மாதம் மட்டும் 53,058 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

    அந்த வகையில் அந்நிறுவனம் விற்பனையில் 24.19 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முன்னதாக நவம்பர் 2017 ஆண்டு சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 42,722 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    "சுசுகி தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று வருவதே இந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மீது நுகர்வோர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இதே வளர்ச்சியை வரும் மாதங்களிலும் பதிவு செய்வோம் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். மேலும் 2018-19 நிதியாண்டிற்குள் 7.5 லட்சம் என்ற விற்பனை இலக்கை அடைவோம்," 

    என சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிர்வாக தலைவர் சடோஷி உச்சிதா தெரிவித்தார்.



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா ஒட்டுமொத்தமாக 56,531 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. முன்னதாக இதே மாதம் கடந்த ஆண்டில் 49,647 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் சுசுகி நிறுவனம் 13.86 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    இதேபோன்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மொத்தம் 4,93,329 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. #suzuki
    சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #suzuki #Gixxer250



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஜிக்சர் 250 இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சுசுகி நிறுவனம் ஜி.எஸ்.எக்ஸ்.250 ஆர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    புதிய 250சிசி ஜிக்சர் மாடல் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஜிக்சர் 150 மாடலை போன்று இருக்கும் என தெரிகிறது. இந்திய மாடலில் ட்வின்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படாமல், லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    ஜிக்சர் 150 போன்று ஜிக்சர் 250 மாடலும் நேக்கட் மற்றும் ஃபுல்லி-ஃபேர்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பை பொருத்த வரை தற்போதைய 150சிசி மாடலைத் தழுவி சுசுகி ஜிக்சர் 250 மாடல் வடிவமைக்கப்படுகிறது. எனினும், இரு மாடல்களை வித்தியாசப்படுத்த சில மாடல்கள் கூடுதலாக வழங்கப்படலாம்.

    அதன்படி கூடுதல் அம்சங்களாக இன்வெர்டெட் ஃபோர்க், முன்புறம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக், டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கும். தற்போதைய ஜிக்சர் 250 விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில விவரங்கள் இணையத்தில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்.எஃப். 155சிசி மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இரண்டு வேரியன்ட்களிலும் 155சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பி.ஹெச்.பி. பவர், 14 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு செய்ய ரூ.5000 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட பர்க்மேன் 125 ஜூலை மாத வாக்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பாடி-மவுண்ட் விண்ட்ஸ்கிரீன், மல்டி-ஃபன்க்ஷன் கீ ஸ்லாட் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சுசுகி அக்செஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 சிசி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.6 பி.ஹெச்.பி பவர் @6500 ஆர்.பி.எம். மற்றும் 10.2 என்.எம். டார்கியூ @5000 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. 



    சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் அதிக இட வசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டையர் மற்றும் எல்.இ.டி. டெயில்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு நிறங்களில் அசத்தலாக வெளியாக இருக்கும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடல் இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா 125, டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோன்டா கிரேசியா மற்றும் புத்தம் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×