என் மலர்
நீங்கள் தேடியது "விசாரணை"
- சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
- உலோக நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, 2 உலோக பாவை விளக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:
சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆகியோரின் உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் ஆகியோரின் அறிவுறுத்தல்படி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பைபாஸ் சாலை ராம்நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்த குருசேவ் (வயது42), கொரநாட்டுக்கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (36) ஆகியோர் என்பதும், உலோக சிலைகள், பாவை விளக்குகளை திருடி மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
பின்னர் அங்கு உள்ள ஒரு இடத்தில் வெள்ளை துணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலோக நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, 2 உலோக பாவை விளக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசேவ், பால்ராஜ் ஆகிய 2 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி சண்முகப்பிரியா முன்பாக ஆஜர் படுத்தினர். அப்போது 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் பாவை விளக்குகள் கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார்.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி காவல் சரகம் எஸ் புதூர், மேல அலங்கன் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் விஜய்(28). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபஸ்ரீ அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவிடைமருதூர் போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
- லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று அவர் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளது தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40).
தனியார் நிறுவன மேலாளர்
இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு தனியார் இரும்பு விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் இருந்து பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
ரூ. 10 லட்சம் கொள்ளை
அதுபோல உடன்குடியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான உருக்காலைக்கு இரும்பு அனுப்பியதற்கான பணத்தை நேற்று முன்தினம் செந்தில்குமார் வாங்க சென்றார்.
அவர் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு தனது நிறுவனத்திற்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தூத்துக்குடி திரும்பினார்.
லோடு ஆட்டோவை தூத்துக்குடியை சேர்ந்த சின்னத்துரை என்பவர் ஓட்டினார். ஆட்டோ உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டோவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நைசாக ஆட்டோவில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்றனர்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க திருச்செந்தூர் டி.எஸ்பி. ஆவுடையப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
டிரைவரை பிடித்து விசாரணை
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் சின்னத்துரையை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மாயழகு (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதில் விரக்தியடைந்த மாயழகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளாச்சேரி மொட்டைமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துப்பாண்டி வீட்டருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடல்புதூர் ஆபீசர் டவுன் 9-வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (45). மன அழுத்தத்தில் இருந்த இவர் சம்பவத்தன்று ஆசிட் குடித்தார். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை அருகே உள்ள ஓடைப்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகு (வயது 50). இவருடைய மகன் ஒன்றரை வருடத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 2 மாதங்க ளுக்கு முன்பு அவருடைய மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இருவரது மரணங்களால் மனமுடைந்த அழகு வீட்டு அருகே இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தை சேர்ந்த அய்யனார் மகன் கிரிவலவன் (வயது 18). இவர் சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். அவனை ஐ.டி.ஐ.யில் சேர்ந்துபடிக்க தாயார் வலியுறுத்தினார். இதில் மனமுடைந்த கிரிவலவன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாயார் மணிமேகலை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- இப்பகுதியில் வசித்து வரும் அரியவகை புள்ளி மான்கள் இரை தேடி வழி தவறி கிராமத்திற்குள் வந்து விடுகிறது.
- தப்பியோட வழி இல்லாமல் சிக்கிய அரியவகை புள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அடுத்த பாகசாலை, தேத்தாக்குடி, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் அரியவகை புள்ளி மான்கள் வசித்து வருகிறது. அவ்வப்போது இரை தேடி வயல் பகுதிக்கு வரும் மான்கள் வழி தவறி கிராமத்திற்குள் வந்து விடுகிறது.
இவ்வாறு பாகசாலை கிராமத்திற்கு உள்ளே வழி தவறி வந்த மானை அப்பகுதி நாய்கள் துரத்தி யுள்ளது. தப்பி ஓட வழி இல்லாமல் சிக்கிய அரிய வகைபுள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் விரை ந்து வந்த சீர்காழி வனத்துறை அலுவலர்கள்புள்ளி மானின் உடலைமீட்டு வனப்பகுதியில் புதைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ரூ.41 லட்சம் மோசடி: மதுரை நகை வியாபாரி, மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.
மதுரை
சேலம் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் குமார் (41). இவர் மதுரை மாநகர குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
அதில் நான் சேலம் மாவட்டத்தில் வெள்ளி ஆபரண நகைக்கடை நடத்தி வருகிறேன். மதுரை பி.பி.குளம், ரத்தினசாமி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோர் என்னை தேடி வந்தனர். அவர்கள், நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறோம். நீங்கள் கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்' என்று தெரிவித்தனர்.
நான் அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை. நகைகளையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் குப்புசாமி மேற்பார்வையில், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
- இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.
இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த அருணாச்சலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோரை கட்டிப்போட்டு 140 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சததிரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலைவழக்கில் தேடப்பட்டவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
- 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வம் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தனர் .
அதில் 2-வது குற்றவாளி யாக கருதப்படும் மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்த பொன்னாங்கன் (வயது 43) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் போலீசிடம் சிக்காமல் தலைமுறைவாகிவிட்டார் ஆனாலும் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொன்னாங்கன் மதுரையில் உள்ள தனது உறவினர்களை பார்க்க வந்திருப்பதாக ஆஸ்டின்பட்டி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுற்றி வளைத்து பொன்னாங்கனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொன்னாங்கனிடம் 2011 ஆம் ஆண்டு நடந்த வெற்றி செல்வம் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை வழக்கில் தேடப்பட்டவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- அவரது மகன் சுதீஷ் (வயது 26) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல், ஜூன்.30-
இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 57). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் காலை ஆலங்கோட்டை சேர்ந்த பேபிகுமார் என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் அவரது பின்பக்கம் கழுத்து, வலது தோள்பட்டை, இடது கை ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுதீஷ் (வயது 26) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர்.
- தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.
- ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர்.
திருவட்டார், ஜூன்.30-
திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் வேர்கிளம்பி பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனம் வந்தது. அந்த வாகனத்தை போலீ சார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனை செய்த போது 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்ப ட்டது.
உடனே வாகனத்தில் வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவட்டார் அருகே நாராயணத்து விளை பகுதியை சேர்ந்த ஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் (வயது29), முள விளை வியனூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (28) என தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் தங்கள் செல்போனில் வாட்ஸ்ஆப் குரூப் தொடங்கி அந்த பகுதியில் உள்ள பள்ளி-கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் நைசாக பேசி கஞ்சா விற்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர். இவர்களது பண பரிவரித்தனைகள் அனைத்தும் ஜி. பே. மூலம் நடைபெற்றுள்ளது.
தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.
இது பற்றி ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர். கைதானஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் தனியார் நிறுவனத்தில் லோன் வசூலிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
பிரதீஷ், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
- விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை, ஜூன்.30-
மார்த்தாண்டத்தை அடுத்த மருதங்கோடு கல்லறைவிளை பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 73).
இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று காலை பால் வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனால் பதறி போன உறவினர்கள்- உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
இந்நிலையில் அருகாமையிலுள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பாலம மாள் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.