search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலா"

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ரோஷினி பிரகாஷ் - அருண் விஜய்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் பாலா தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர்.
    • இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


    இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரை இயக்குனர் சிறுத்தை சிவா நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில், நடிகர் பாலா தனது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    இதையடுத்து அவர் கூறியதாவது, "எல்லாருடைய பிரார்த்தினையால் மீண்டு வருகிறேன். எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் அனைவரது பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.

    • சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படம் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.

    வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.

     

    துணை நடிகை லிண்டா

    துணை நடிகை லிண்டா

    இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா.
    • இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


    பாலா

    இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பதாகவும் இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலாவின் தாய் மற்றும் மனைவி எலிசபெத் அவரை உடனிருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

    • வீரம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தை பெற்றவர் நடிகர் பாலா
    • இவர் நடித்த 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்று சுமார் ௫௦ படங்களில் நடித்துள்ளார்.

    அனூப் இயக்கத்தில் இவர் நடித்த 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. மம்முட்டி உட்பட பல நடிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டி உள்ளனர். இந்தப் படத்தை தயாரித்த நடிகர் உண்ணி முகுந்தன் படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியும் படத்தில் நடித்த பாலாவுக்கு சம்பளம் எதுவும் தராமல் இழுத்தடித்ததாகத் கூறப்படுகிறது.


    பாலா

    இதனைத் தொடர்ந்து உண்ணி முகுந்தனின் செய்தியாளர் சந்திப்பில் பாலாவின் சம்பளப் பிரச்சினை பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்க, அது பெரும் பிரச்சனையாக மாறியது. இது குறித்து நடிகர் பாலா கூறியதாவது "உண்மை எப்போதும் உறங்காது. தனக்காக குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துக் கொண்டார்.

    விரைவில் நடிகர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கேரள அரசின் சிறந்த நடிகருக்கான 'கோல்டன் அவார்ட் 'என்கிற விருதைப் பாலா பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பாலா ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா சமீபத்தில் விலகினார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் ஆனாலும் 'வணங்கான்' திரைப்படத்தின் பணிகள் தொடரும் என்றும் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


    வணங்கான்

    இதனைத் தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவாது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்பு பாலா இயக்கிய 'பரதேசி' திரைப்படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது தொடர்பான சூர்யாவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.


    சூர்யா - பாலா

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.


    வணங்கான்

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாலாவின் இந்த அறிக்கைக்கு சூர்யாவின் 2டி நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளது.



    • தமிழில் 'அன்பு', 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா', 'வீரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பாலா.
    • பாலா 2-வது மனைவி எலிசபெத்தையும் பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.

    தமிழில் 'அன்பு' படம் மூலம் அறிமுகமான பாலா தொடர்ந்து 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பாலாவுக்கு 2016-ம் ஆண்டு பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. பின்னர் டாக்டரான எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

     

    அஜித்துடன் பாலா

    அஜித்துடன் பாலா

    இந்நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது. இதற்கு பாலா சமூக வலைத்தளத்தில் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ''இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னை விட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'வணங்கான்'.
    • 'வணங்கான்' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.


    வணங்கான்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    'வணங்கான்' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் பாலா தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.

    சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சூர்யா பகிர்ந்திருந்தார்.

    சூர்யா 41

    சூர்யா 41

    இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் அறிவிப்பு இன்று (11.07.2022) மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.


    ×