என் மலர்

  நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
  • போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

  திருப்பூர் : 

  திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

  பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

  சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
  • மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை- திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பஸ் 7 முறை சென்று வந்தது. இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.

  இதனால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  எனவே கூடுதல் நேரங்களில் பஸ்கள் இயக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை-திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

  இதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளிகளும் உள்ளன.
  • திருக்குறளை தவிர மற்றவைகளை ஆங்கிலத்தில் பேசுவதற்காக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்துவதால் ஆங்கில புலமையும் அதிகரிப்பதாக உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார்.

  சென்னை:

  பொதுவாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்கிற குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

  இந்த குறையை போக்க சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

  சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளிகளும் உள்ளன.

  இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க வகுப்பறையில் ஆங்கில ஆசிரியர் பாடம் எடுப்பதற்கு முன்பாக 2 மாணவ-மாணவிகள் 2 நிமிடம் ஆங்கிலத்தில் பேச சொல்ல வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

  இதற்காக மாணவ-மாணவிகள் நூலகத்திற்கு சென்று குறிப்பு எழுதி வந்து அதன்மூலம் பயிற்சி பெறுகின்றனர்.

  இதன் அடுத்தக்கட்டமாக இப்போது வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் பிரேயரில் வாரம் ஒரு நாள் (புதன்கிழமை) யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் பேசி நடத்த வேண்டும். சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த பிரேயர் சுமார் 17 நிமிடங்கள் முதல் 18 நிமிடம் வரை நடைபெறும்.

  இதில் திருக்குறளை தவிர மற்றவைகளை ஆங்கிலத்தில் பேசுவதற்காக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்துவதால் ஆங்கில புலமையும் அதிகரிப்பதாக உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார்.

  சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வழிகாட்டுதலின்படி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஆங்கில புலமையையும் அதிகரிக்க இந்த ஏற்பாடுகளை நடைமுறை படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

  குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆங்கில புலமை பயிற்சி முழுமையாக செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  கடந்த 2011-ம் ஆண்டு பின்லாந்து நாட்டுக்கு மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர் கல்வி சார்ந்த பயணம் மேற்கொண்டனர். அப்போது பின்லாந்து நாட்டு இந்திய தூதராக தமிழ்நாட்டை சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருந்தார்.

  அவர் பள்ளிகளின் செயல்பாடுகள், ஆங்கிலத்தில் பாடங்களை சொல்லி கொடுக்கும் முறை, ஸ்மார்ட் வகுப்பறை போன்றவற்றை மாநகராட்சி குழுவினருக்கு எடுத்து கூறினார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

  இதன்பிறகு ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம் இன்று மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி வருகிறது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.
  • விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

  கன்னியாகுமரி:

  உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலோர காவல் குழுமம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் குளச்சல் மரைன் காவல் நிலையம் சார்பில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக இணைய தள விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.

  மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மாணவிகளுக்கு சமூக இணைய தளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்யக்கூடாது, அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது, குறிப்பாக காதல் வசப்படக்கூடாது. எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூற வேண்டும்.தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது, படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிர்க்காலத்தை பெற்றோர் அமைத்து தருவர். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது.விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவது, பெற்றோரை கொலை செய்வதற்கு சமம்.தினமும் நீங்கள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்.அதில் வரும் குற்றச்செய்திகளை தெரிந்து கொண்டு, நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டி ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடாது.

  திருப்பம், வளைவுகளில் செல்லும்போது போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துக்களில் சிக்க கூடாது என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் 'போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்'என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர் கெஜின், உடற்கல்வி ஆசிரியர் ஜூடின் மற்றும் மரைன் போலீசார் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளதால் அரசு பேருந்தில் செ ல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

  இந்நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் வரும் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தோன்றியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

  இது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சில பேருந்துகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அந்த நேரத்தில் பள்ளிக்கு தாமதம் ஏற்படும் என ஒரே பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  பெரும்பாலான வழித்தடத்தில் மாணவர்கள் இதுபோன்று படியில் தொங்கி பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளி நேரத்தில் அதிக அளவிலான அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன் பாதுகாப்பான பயணத்தி னை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
  • பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர்.

  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி கடந்த 17ந் தேதி முதல் நடந்து வருகிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.

  குறுமைய அளவில் தடகள போட்டி நடத்திய போதும், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட தடகள போட்டிக்காக தேதி, நடத்துமிடம் முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது.பிற போட்டிகள் நடக்குமிடம், நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தடகள போட்டி குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு முன்பு 27, 28ந்தேதிகளில் அனைத்து பிரிவினருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். ஆனால் அறிவித்தப்படி போட்டி நடக்கவில்லை.

  இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், தடகள போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் மண்டல மேலாண்மை குழு அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், தடகள போட்டி தேதி நவம்பர் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 3, 4-ந் தேதி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தடகள போட்டி நடத்தப்படும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவை மேம்படுத்த நடவடிக்கை
  • இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளவகையில், மாவட்ட நூலகத்தில் தொடங்கி வைக்கப்ப ட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியவை தொடர்பான நிகழ்வு நடந்தது.

  கலெக்டர் மதுசூதன் ரெட்டி இதை நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

  அப்போது கலெக்டர் பேசியதாவது:-

  சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

  மேலும், பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணவர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணை யோடு அழைத்து வந்து, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

  மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

  இங்கு வரும் மாணவர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

  இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும், பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.

  மாணவர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை, பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பொதுஅறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர்.
  • மீதமுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 148 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 பள்ளிகளில் அரசு வழங்கிய சீருடைகள் பயன்படுத்தப்படவில்லை.

  சென்னை:

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4 சீருடைகள் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்த சீருடைகள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  2021-22-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை 47.89 லட்சம். அவர்களில் 38.41 லட்சம் பேர் மதிய உணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

  2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 4 மாவட்டங்களில் உள்ள 1,425 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடை பயன்பாடு குறித்த தணிக்கை ஆய்வு நடத்தப்பட்டது

  இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 66 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 48 பள்ளிகளில் பள்ளிகளின் நிர்வாகங்கள் வெவ்வேறு வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொண்ட சீருடையை அமல்படுத்தி உள்ளதால் அரசு வழங்கிய இலவச சீருடை அணியவில்லை.

  13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர். மீதமுள்ள நாட்களில் அவர்கள் பள்ளி நிர்ணயித்த சீருடையை அணிவது தெரியவந்துள்ளது.

  மீதமுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 148 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 பள்ளிகளில் அரசு வழங்கிய சீருடைகள் பயன்படுத்தப்படவில்லை. மேலும் 36 பள்ளிகளில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

  இரண்டு வெவ்வேறு சீருடைகளை அணிவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட கோரிக்கைகள் பெறாமல் தேவையின்றி இலவச சீருடைகள் வழங்குவதாக தணிக்கை துறை குற்றம் கண்டறிந்து உள்ளது.

  அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு அவர்களது தேவையை அறிந்து கொள்ளாமல் சீருடை வழங்கியதில் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் அளவுக்கு தேவையற்ற செலவினம் ஏற்பட்டதாகவும், மேலும் சீருடை ஓரளவு மட்டுமே பயன்படுத்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளால் 2 கோடியே 25 லட்சம் அளவுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை கண்டறிந்துள்ளது .

  எனவே அரசு திட்ட வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யலாம், சீருடை கேட்டு கோரிக்கைகள் வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்கலாம். வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணியும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் எண்ணிக்கையை குறைக்கலாம் என தணிக்கை துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு வந்தனர்.
  • இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  தொப்பூர்,

  தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சாமி செட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கமலநத்தம் கிராம பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு வந்தனர். இதனை பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தனர்‌.

  தற்போது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அரசு பேருந்து புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய வழித்தட நீட்டிப்பு மூலம் கமலநத்தம் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் புதிதாக வருகை புரிந்த வழித்தடம் எண். 10-பி பேருந்துக்கு ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு பூஜை செய்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  கமலநத்தம் கிராம பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் ஊர் பொது மக்களும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போட்டி துவங்கும் நேரத்துக்கு (காலை 7 மணி) முன்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்.
  • அனைத்து பிரிவினருக்கான தடகள போட்டி வரும் 27, 28ந் தேதி 2 நாட்கள் நடக்கிறது.

  திருப்பூர்:

  நடப்பு கல்வியாண்டுக்கான குறுமைய போட்டிகள் ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அணிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வரும் 17 ந் தேதி துவங்குகிறது.

  அன்றைய தினம் அனைத்து பிரிவினருக்கான எறிபந்து, டென்னிகாய்ட், பீச் வாலிபால் போட்டி நடக்கிறது. வரும் 18-ந்தேதி முதல், 21-ந் தேதி வரை ஒரு கட்டமாகவும், தீபாவளி விடுமுறை முடிந்து, அக்டோபர் 27 முதல் நவம்பர் 5ந் தேதி இரண்டாம் கட்டமாக என 11 நாட்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அனைத்து பிரிவினருக்கான தடகள போட்டி வரும் 27, 28ந் தேதி 2 நாட்கள் நடக்கிறது.

  இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், குறுமைய குழு போட்டியில் முதலிடம், ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள், தடகள போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள், 400 மீ., 1,600 தொடர் ஓட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர் மாவட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்கலாம். போட்டிகள் நடக்கும் நாள், எந்த பள்ளி, நேரம் குறித்த அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  குறுமைய அளவில் வெற்றி பெற்று தேர்வாகிய மாணவர், மாணவிகள் பள்ளி அணி கட்டாயம் மாவட்ட போட்டியில் பங்கேற்று விளையாட வேண்டும். இல்லையேல் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போட்டி துவங்கும் நேரத்துக்கு (காலை 7 மணி) முன்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
  • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார் பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

  மங்கலம் :

  திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரத்தில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தினசபாபதி, சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ,தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் எஸ்.பி.தியாகராஜன், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , சாமளாபுரம் பேரூர் திமுக கட்சியைச் சேர்ந்த அவைத்தலைவர்,ஒன்றியபிரதிதி, மாவட்ட பிரதிநிதி ,வார்டு செயலாளர்கள் ,பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin