என் மலர்
வழிபாடு
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 8 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 9.42 மணி வரை பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை காலை 6.31 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஆண்டவர் வெள்ளிக் கேடயத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ராமாவதாரம், மதுரை மீனாட்சி சுந்த ரேசுவரர் காலை எடுப்புத் தேர், இரு சப்தாவர்ணம். கண்ணப்ப நாயனார் குருபூஜை. காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், லால்குடி, திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-அமைதி
மிதுனம்-உழைப்பு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-பாராட்டு
துலாம்- நட்பு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- பாராட்டு
மகரம்-முயற்சி
கும்பம்-விருத்தி
மீனம்-பயிற்சி
- பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்வார்கள்.
- காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் அலகு குத்தியும், பால், பன்னீர், பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னரே வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.
தற்போது பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
நேற்று தை மாத கார்த்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம், கிரி வீதிகளில் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- குமரனுக்கு `சிலம்பன்’ என்ற பெயரும் உண்டு.
- சேவல் கொடிக்கு `குக்குடம்’ என்ற பெயர் உண்டு.
* 'முருகா' என்று ஒருமுறை சொல்கிற பொழுது, மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் அருளும் கிடைக்கப்பெறும். 'மு' என்றால் 'முகுந்தன்' என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். 'ரு' என்றால் 'ருத்ரன்' என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். 'க' என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் 'முருக' என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளும் அருள்வார்கள் என்பது ஐதீகம்.
* மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு `சிலம்பன்' என்ற பெயரும் உண்டு. அதே போல் முருகனுக்கு 'விசாகன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. 'விசாகன்' என்பதற்கு 'மயிலில் சஞ்சரிப்பவன்' என்பது பொருளாகும்.
* முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், சேவல்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
* முருகனின் சேவல் கொடிக்கு `குக்குடம்' என்ற பெயர் உண்டு. இந்த சேவலே, வைகறைப் பொழுதில் ஓம்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
* கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை, தினமும் அதிகாலையில் படிப்பவர்களது பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
* முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள், முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். முருகப்பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்த நாட்கள்.
* முருகன் கங்கையால் தாங்கப்பட்டதனால், 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் வாயு பகவானால் விடப்பட்டதால் 'சரவணபவன்' என்றும் அழைக்கப்படுகிறாா். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்பதால் 'கார்த்திகேயன்' என்பர். பார்வதி தேவயால் ஆறு உருவமாக இருந்த முருகப்பெருமான் ஒரே உருவமாக மாற்றப்பட்டதால் 'கந்தன்' எனப்பட்டார்.
* தமிழகத்தில் முருகனுக்கு குடவரைக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில், கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோவில், மாமல்லபுரம் போன்றவை முக்கியமானவை.
* முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர் திருக்கோவில் என்று சொல்லப்படுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டியுள்ளான். இந்தக் கோவிலில் முருகனுக்கு, யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
* கந்தனுக்குரிய விரதங்கள்:- வார விரதம் எனப்படும் செவ்வாய்க்கிழமை விரதம், நட்சத்திர விரதம் எனப்படும் கிருத்திகை விரதம், திதி விரதம் எனப்படும் சஷ்டி விரதம். முருகனின் மூலமந்திரம் `ஓம் சரவணபவாய நமஹ' என்பதாகும்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையான உள்ளத்துடன், `ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம்' ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
* முருகன் சிறிது காலம் நான்முகனுக்கு பதிலாக படைப்புத் தொழிலையும் செய்திருப்பதை புராணங்களின் வாயிலாக அறியலாம். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து 7 மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுடன் அருளும் முருகப்பெருமானை தரிசிக்க முடியும்.
* முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்று. அவற்றில் சூரபத்மனை அழித்த இடம் திருச்செந்தூர். தாரகாசுரனை வதம் செய்த இடம், திருப்பரங்குன்றம். சிங்கமுகாசுரனை அழித்த இடம் திருப்போரூா்.
- திருநன்னிலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது மதுவனேசுவரர் கோவில்.
- தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
கோவில் தோற்றம்
திருவாரூர் மாவட்டம் திருநன்னிலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, மதுவனேசுவரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கயிலை மலையில் சகல சாஸ்திரங்களையும், புராணங்களையும் உணர்ந்தவர், சூத மகா முனிவர். சதானந்தனர் முதலிய முனிவர்கள் சூத மகா முனிவரை வணங்கி, புத்தியும், முக்தியும் வழங்கும் சிவதலங்களைப் பற்றி கேட்டறிந்தனர். அப்போது சூத முனிவர், திருநன்னிலம் பகுதியில் உள்ள இந்த திருத்தலத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
கிருதயுகத்தில் சந்திர குலத்தில் தோன்றியவன், சோமாபுரியை ஆட்சி செய்த பிருஹத் என்ற அரசன். இவன் தன் பதவியையும், அரசபோகத்தையும் தன்னுடைய எதிரிகளால் இழந்தான். பின்னர் அவன் திருநன்னிலம் பகுதிக்கு வந்து தவம் இயற்றினான். அவனுக்கு இத்தலத்தில் சிவபெருமான் காட்சி தந்து அருள்பாலித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
மேலும் சிவபெருமான், தன்னுடைய சூலாயுதம் கொண்டு இங்கே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். அதில் தன் சடைமுடியில் உள்ள கங்கையைக் கொண்டு நீரை நிரம்பச் செய்தார். அந்த குளத்திற்கு 'பிருஹத் கங்கை' என்று பெயர்.

பிரம்மன் தன் தொழில் நலம் பெற வேண்டி, இந்த திருத்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டுள்ளார். மேலும் தானே ஒரு சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டுள்ளார். அந்த லிங்கத்திற்கு 'பிரம்ம லிங்கம்' என்று பெயர். இந்த லிங்கத்தை வழிபாடு செய்பவர்களுக்கு, தொழிலில் மேன்மையும், நன்மையும் வந்து சேரும். அகத்தியரும் இத்தல இறைவனான மதுவனேசுவரரை வழிபாடு செய்துள்ளார். அகத்தியா் தனியாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத்திற்கு, `அகத்தீசுவரர்' என்று பெயர்.
பழங்காலத்தில் இந்த ஆலயம் திருநன்னிலத்து பெருங்கோவில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை கோச்செங்கட் சோழன் என்ற மன்னன் எழுப்பியுள்ளான். யானைகளால் ஏற முடியாத மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று. தொடக்க காலக் கோவில்கள் மரத்தாலும், பின்னர் சுடுமண்ணாலும் கட்டப்பட்டன. பல்லவர் காலத்தில் கருங்கற்களால் கோவில்கள் கட்டப்பட்டன.
பிற்காலச் சோழர்கள் சோழநாட்டில் பெரும்பாலான கோவில்களைக் கருங்கற்களால் கட்டித் திருப்பணி செய்தனர். இவர்களில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் சிலந்தி ஒன்று, தன்னுடைய நூலிழை கொண்டு, சிவலிங்கத்திற்கு மேல் பகுதியில் பந்தல் அமைத்தது. அதே சிவலிங்கத்தை தினமும் வழிபட்ட வந்து யானை, கோவிலுக்குள் இது என்ன சிலந்தி வலை என்று அதனை பிய்த்து எறிந்தது. இதனமும், சிலந்தி வலையால் பந்தல் அமைப்பதும், யானை அதை பிய்த்து எறிவதும் வாடிக்கையானது.
ஒருநாள் சிலந்தி, தன் வலையை பிய்ந்த யானையின் துதிக்கையில் புகுந்தது. இதனால் துன்பப்பட்ட யானை தன் துதிக்கையை தரையில் வேகமாக பலமுறை அடித்தது. அதில் தும்பிக்கையில் இருந்த சிலந்தி இறந்தது, பலமாக தரையில் தன் துதிக்கையை அடித்துக் கொண்ட யானையும் பலியானது. சிவபக்தியால் உயிர் துறந்த அந்த இரண்டு ஜீவன்களுக்கும் சிவபெருமான் அருள்புரிந்தார்.
அதன்படி யானைக்கு முக்தியை அளித்த ஈசன், சிலந்தியை சோழ குலத்தில் மன்னனாக பிறக்கச் செய்து, பல திருக்கோவில் பணிகளை செய்ய பணித்தார். அதன்படி பிறந்தவரே கோட்செங்கட் சோழன் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அவர் கட்டிய அனைத்து கோவில்களையும், யானைகள் ஏறிச்செல்ல முடியாத மாடக் கோவில்களாக அமைத்ததாகவும் சொல்கிறார்கள்.
துவாபர யுகத்தில் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், விருத்திராசுரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்டனர். இந்திரனையும், பிற தேவர்களையும் தேவலோகத்தில் இருந்து விரட்டிய விருத்திராசுரன், தேவலோகத்தை ஆட்சி செய்தான். அந்த அசுரனுக்கு பயந்து, தேவர்கள் அனைவரும் பூமிக்கு வந்து பதுங்கியிருந்தனர்.
அந்த இடமே இயற்கை எழில் சூழ்ந்த திருநன்னிலம் திருத்தலம். இங்கு இந்திரன் முதலான அனைத்து தேவர்களும், சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தனா். அப்போது தன்னிடம் இருந்து தப்பிய இந்திரனையும், மற்ற தேவா் களையும் கண்டுபிடித்து வரும்படி தன்னுடைய அசுரப்படையை விருத்திராசுரன் அனுப்பினான்.
இதனை அறிந்த தேவர்கள் அனைவரும் தேனீக்களாக மாறி, பிருஹத் கங்கை தீர்த்தத்திற்கு நான்கு பக்கமும், மரங்களில் உள்ள துளைகளில் சென்று ஒளிந்துகொண்டனர். மேலும் தேனீக்கள் உருவத்தில் இருந்தபடியே, மலர்களில் இருந்து தேனை எடுத்து வந்து, மதுவனேசுவரர் திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதனால் காரணமாக, இந்திரன் வலிமை பெற்று, விருத்திராசுரனை கொன்று, இழந்த பதவியையும், இன்பங்களையும் மீண்டும் பெற்றான்.
இந்த ஆலயத்தில் கருவறையில் மதுவனேசுவரர் அருள்பாலிக்கிறார். அம்பாள் மதுவன நாயகி, தெற்கு நோக்கிய நிலையில் மதுவனேசுவரரை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்வதற்கு ஏராளமான பஸ் வசதி உள்ளது.
- சுபமுகூர்த்த நாள், காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் புறப்பாடு.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 7 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 9.58 மணி வரை பிறகு துவாதசி.
நட்சத்திரம்: ரோகிணி நாளை விடியற்காலை 6.௦3 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சர்வ ஏகாதசி. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். சூரசம்ஹார நிகழ்ச்சி. குன்றக்குடி முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி. கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு. காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ அஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-அன்பு
மிதுனம்-இரக்கம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-சிறப்பு
கன்னி-கடமை
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- லாபம்
மகரம்-நன்மை
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-பொறுமை
- மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.
அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
- இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.
தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.
- சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
- ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.
இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
- காலை 6.30 மணிக்கு குருசுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 6.30 மணிக்கு குரு.சுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
2-ம் நாளான நாளை (20-ந்தேதி) இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3-ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5-ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6-ம் நாள் கற்பக வாகன பவனி, 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
வருகிற 26-ந்தேதி 8-ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடு தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும் நடக்க உள்ளது. தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.
9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான (ஞாயிற்றுக் கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11-ம் திருவிழாவான 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணி விடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை குருமார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
- மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
41 நாட்கள் நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த கால கட்டத்திலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு படிபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (20-ந்தேதி)யுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் கடைசி நாள் நெய்யபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று இரவு அத்தாள பூஜை நடக்கிறது. அதன்பிறகு மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்பசாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று விட்டு மீண்டும் சன்னிதானம் வந்து சேரும். மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.
மறுநாள் (21-ந்தேதி) காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு திருவாபரண ஊர்வலம் பந்தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் சபரிமலை மேல்சாந்தி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை ஒப்படைப்பார். இத்துடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும்.
- மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
- படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.

இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது.






