search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qualities of Murugan"

    • குமரனுக்கு `சிலம்பன்’ என்ற பெயரும் உண்டு.
    • சேவல் கொடிக்கு `குக்குடம்’ என்ற பெயர் உண்டு.

    * 'முருகா' என்று ஒருமுறை சொல்கிற பொழுது, மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் அருளும் கிடைக்கப்பெறும். 'மு' என்றால் 'முகுந்தன்' என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். 'ரு' என்றால் 'ருத்ரன்' என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். 'க' என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் 'முருக' என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளும் அருள்வார்கள் என்பது ஐதீகம்.

    * மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு `சிலம்பன்' என்ற பெயரும் உண்டு. அதே போல் முருகனுக்கு 'விசாகன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. 'விசாகன்' என்பதற்கு 'மயிலில் சஞ்சரிப்பவன்' என்பது பொருளாகும்.

    * முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், சேவல்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

    * முருகனின் சேவல் கொடிக்கு `குக்குடம்' என்ற பெயர் உண்டு. இந்த சேவலே, வைகறைப் பொழுதில் ஓம்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    * கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை, தினமும் அதிகாலையில் படிப்பவர்களது பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

    * முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள், முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். முருகப்பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்த நாட்கள்.

    * முருகன் கங்கையால் தாங்கப்பட்டதனால், 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் வாயு பகவானால் விடப்பட்டதால் 'சரவணபவன்' என்றும் அழைக்கப்படுகிறாா். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்பதால் 'கார்த்திகேயன்' என்பர். பார்வதி தேவயால் ஆறு உருவமாக இருந்த முருகப்பெருமான் ஒரே உருவமாக மாற்றப்பட்டதால் 'கந்தன்' எனப்பட்டார்.

    * தமிழகத்தில் முருகனுக்கு குடவரைக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில், கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோவில், மாமல்லபுரம் போன்றவை முக்கியமானவை.

    * முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர் திருக்கோவில் என்று சொல்லப்படுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டியுள்ளான். இந்தக் கோவிலில் முருகனுக்கு, யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    * கந்தனுக்குரிய விரதங்கள்:- வார விரதம் எனப்படும் செவ்வாய்க்கிழமை விரதம், நட்சத்திர விரதம் எனப்படும் கிருத்திகை விரதம், திதி விரதம் எனப்படும் சஷ்டி விரதம். முருகனின் மூலமந்திரம் `ஓம் சரவணபவாய நமஹ' என்பதாகும்.

    * செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையான உள்ளத்துடன், `ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம்' ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    * முருகன் சிறிது காலம் நான்முகனுக்கு பதிலாக படைப்புத் தொழிலையும் செய்திருப்பதை புராணங்களின் வாயிலாக அறியலாம். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து 7 மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுடன் அருளும் முருகப்பெருமானை தரிசிக்க முடியும்.

    * முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்று. அவற்றில் சூரபத்மனை அழித்த இடம் திருச்செந்தூர். தாரகாசுரனை வதம் செய்த இடம், திருப்பரங்குன்றம். சிங்கமுகாசுரனை அழித்த இடம் திருப்போரூா்.

    ×