என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானின் நவாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் நவாமி ஒசாகா, அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஆஷ்லின் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜப்பானின் நவாமி ஒசாகா சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் சுமித் நாகல் தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மெக்கின்ஸ் மெக்டொனால்டை எதிர்கொண்டார்..
இந்தப் போட்டியில் மெக்டொனால்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- லாஸ் ஏஞ்சல்சில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடம்
பிடித்து அசத்தியது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.
இதையடுத்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 14-ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஆகியவை இணைந்து கிரேட் பிரிட்டனாக விளையாட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
2026 மற்றும் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பைகள், விளையாட்டை வளர்ப்பதற்கும் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள அதிகமான மக்களை ஊக்குவிக்கவும் இது மற்றொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
லாஸ் ஏஞ்சல்சில் ஏற்கனவே 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது அங்கு 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப்-மஸ்க் நேர்காணலை 13 லட்சம் பேர் நேரலையில் கேட்டனர்.
- அதிபர் தேர்தலை ஒட்டி டிரம்ப்-மஸ்க் நேர்காணல் நடைபெற்றது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற இருந்த நேர்காணல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் வரை தாமதமாக துவங்கியது. நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மற்றும் தற்போது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியை கடுமையாக சாடினார்.

மேலும், தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "அது தோட்டா என்று எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. அது என் காதை பலமாக தாக்கியதும் தெரிந்தது. கடவுள் மீது நம்பிக்கை அற்வர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன், இந்த விஷயம் குறித்து பரிசீலனை செய்ய துவங்குங்கள்."
"அத்தகைய சூழ்நிலையில் துணிச்சலாக இருப்பது போல் நடிக்க முடியாது. தைரியம் உள்ளுணர்வா இல்லையா? அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான் நலமுடன் இருப்பதை தெரிவிக்கவே, உடனடியாக எழுந்து நின்றேன். அவர்கள் அதற்கு ஆரவாரம் செய்தனர்," என்றார்.
- வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தபின் போராட்டக்காரர்கள் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
- இந்து கோவில்கள், வீடுகள், வணிக தொடர்பான இடங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த மாதம் 2-வது வாரம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்க போராட்டம் தணிந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக வெடித்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினமா செய்தார். அதன்பின் போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். அங்கு வாழும் இந்துக்களை தாக்க தொடங்கினர். இதனால் வன்முறை நின்றபாடில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, வன்முறைக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆகஸ்ட் 5-ந்தேதி கவிழ்ந்தது. அதில் இருந்து வங்காளதேசத்தின் 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் மைனாரிட்டி இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பியோட முயற்சி செய்கிறார்கள்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ள நிலையில், வன்முறை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய, இந்தப் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கமாக பணியாற்றும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.
துன்புறுத்தப்பட்ட வங்கதேச இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை வழங்குமாறு பிடன் நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என மிட்சிகன் பாராளுமன்ற உறுப்பினரான தானேதர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏராளமான இந்து கோவில்கள், வீடுகள், வணிகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவாமி லீக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்னர்.
- இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- நேரடி விவாத நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஏ.பி.சி செய்தி ஊடகம் கூறும் போது, டிரம்ப்-கமலா ஹாரிஸ் ஒரு விவாதத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, `விவாதங்களை நடத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் விவாதங்களை எதிர் நோக்குகிறேன். ஏனென்றால் நமது சாதனை நேராக மக்களை சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.
ஜனநாயக கட்சி சார்பில் முதலில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன் அறிவிக்கப்பட்டார். ஆனால் டிரம்புடனான நேரடி விவாதத்தில் ஜோபைடன் திணறினார்.
இதனால் அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது உடல்நிலையை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக புதிதாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் 42 சதவீதமும் , டிரம்ப் 37 சதவீதமும் ஆதரவை பெற்றுள்ளனர்.
- இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.
- வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கழிவறை இருக்கைகளுக்கு அடியில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனத்தின் கிளை நிலையங்களில் உள்ள கழிவறைகளில் சமீபமாக அடுத்தடுத்து சிறிய அளவிலான வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே, நிலையங்களில் உள்ள கழிவறை இருக்கைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.அதாவது, யாரேனும் கழிவறை இருக்கைகளில் அமர்ந்து வெடிகுண்டுக்குத் தேவையான அளவு ஏற்படும் பட்சத்தில் அவை வெடிக்கும். இவை சிறிய அளவிலான சேதத்தையே ஏற்படுத்துவன. இதுபோன்ற வெடிவிபத்துகள் கடந்த ஜூலை 19, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடந்துள்ளது. சமீபத்திய வெடி விபத்தில் பெண் கஸ்டமர் ஒருவர் காயமடைந்தார்.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் நபர் ஒருவர் சந்தேகத்துக்கிட்டமான வகையில் அனைத்து கிளைகளுக்கும் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் வாஷ் டப் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய போலீஸ், அல்டென் என்ற நபரை கைது செய்தது. அல்டென் அந்நிறுவனத்தின் வாடிக்கை கஸ்டமர் என்றும், வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
- வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "வங்காளதேச இடைக்கால அரசுடன் அமெரிக்க அரசு தொடர்பில் உள்ளது. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார். வங்காளதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என இடைக்கால அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
- சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் 8 மாதமாகும் என தகவல் வெளியானது.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரும்புகிறார்.
வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(58), மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(61) ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.
இந்த பிரச்சனையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புமாம்.
ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாமல் சுனிதா திரும்புவதில் சிக்கல் நீடித்தால் இதுதான் ஒரே வழி ஆகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
- தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என டிரம்ப் மிரட்டல்
- ட்ரம்ப் தோல்வியடைந்தால் அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டுடிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
இதனையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
CBS செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே ரத்த களறியாகும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
- ஜோர்டான் 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க மல்யுத்த ஜாம்பவான் ஜோர்டான் பர்ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.
மல்யுத்த போட்டியில் 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், லண்டன் 2012 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜோர்டான் பர்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
1. வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச மல்யுத்த சம்மேளனம், தங்களது விதிகளை மாற்ற வேண்டும்
2. இரண்டாவது நாள் எடையை பரிசோதிக்கும் போது குறைந்தபட்சம் அனுமதிக்கப்பட்ட எடையை விட ஒரு கிலோ கூடுதலாக இருக்கலாம் என்று விதியை மாற்ற வேண்டும்.
3. தற்போது மல்யுத்த போட்டிகளுக்கான எடை காலை எட்டு முப்பது மணிக்கு பரிசோதிக்கப்படுகிறது. இதனை 10:30 மணிக்காக மாற்ற வேண்டும்.
4. எடை பரிசோதனையில் வீரர் தோல்வியை தழுவி விட்டால் அந்தப் போட்டியை கைவிட்டு எதிர் வீரருக்கு தங்கப் பதக்கத்தையும் எடை தேர்வில் தோல்வியடைந்த வீரருக்கு வெள்ளி பதக்கத்தையும் வழங்க வேண்டும்.
5. வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும்.
என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் டெல் முதலீடு செய்யவுள்ளது.
- கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் சேல்ஸ் பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இத்தனை பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.






