என் மலர்tooltip icon

    உலகம்

    • ஷேக் ஹசீனாவுக்கு நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது.
    • ஷேக் ஹசீனா விவகாரம் வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம் என சீனா கருத்து தெரிவிப்பு.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, டாக்காவின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நேற்று மரண தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தங்களிடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு இந்தியாவுடன் விரோத போக்கை எதிர்கொண்டு வருகிறது. அதேவேளையில் சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவிடம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் "ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கபட்டது அவர்களுடைய உள்நாட்டு விவகாரம்" எனத் தெரிவித்தார்.

    மேலும், "சிறந்த அண்டை நாடு மற்றும் நட்புறவு கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது.

    வங்கதேசம் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடையும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம்" என்றார்.

    • அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • அமெரிக்காவில் பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிவை சந்தித்துள்ளது.

    சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் (Institute of International Education) அறிக்கைப்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17% சரிந்துள்ளது.

    2023-24 உடன் ஒப்பிடுகையில் இளங்கலையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11.3% அதிகரித்துள்ளது. அதே சமயம் முதுகலை பிரிவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 9.5% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு புதிய விசா நடைமுறை இதற்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள்.
    • ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார்.

    2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிவிதித்தார்.

    ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர், "குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.

    இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்" என்றார். குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லின்ட்லே கூறுகையில், "ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும். புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்" என்றார்.

    • 2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
    • இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க தொடங்கியது.

    6 வருட இடைவெளிக்குப் பிறகு சீனாவிற்கு தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதாக டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 1 முதல் டெல்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் இடையே நேரடி விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பில், இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை போயிங் 787-8 விமானங்கள் இயக்கப்படும்.

    2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க  தொடங்கியது.

    முன்னதாக கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.   

    • இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும்

    இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.

    வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. 

    • பின்னாட்களில் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
    • 'ஹோமர்'ஸ் போபியா' எபிசோடுக்காக இவருக்கு எம்மி விருது கிடைத்தது.

    90களில் அமெரிக்காவில் மிகவும் பரவலான கார்ட்டூன் தொடர் 'தி சிம்ப்சன்ஸ்'. இது பின்னாட்களில் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

    'தி சிம்ப்சன்ஸ்' ஐ உருவாக்கியவர் பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் உருவாக்கிய டான் மெக்ராத் ஆவார். 1997ஆம் ஆண்டு 'தி சிம்ப்சன்ஸ்' தொடரின் 'ஹோமர்'ஸ் போபியா' எபிசோடுக்காக இவருக்கு எம்மி விருது கிடைத்தது.

    61 வயதான டான் மெக்ராத் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி காலமானதாக அவரது சகோதரி கெயில் மெக்ராத் தெரிவித்துள்ளார். டான் மெக்ராத் மறைவு கார்ட்டூன் உலகிற்கு பேரழிப்பாக அமைந்துள்ளது.  

    • வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து சென்றுகொண்டிருந்தது.
    • கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால் சிக்கல் ஏற்பட்டது.

    வியட்நாமில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

    வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து 32 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் கான் லே மாகாணத்தில் கணவாய் ஒன்றில் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்தது.

    அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்தின் மேல் பாறைகள் விழுந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியது.

    பல பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் கனமழையால் கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால், மீட்புப் படையினரால் பல மணி நேரம் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.

    நள்ளிரவுக்குப் பிறகுதான் மீட்புப் படையினர் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உடல்களும் மீட்கப்பட்டன.

    கான் லே மாகாணத்தில் பல மலைப்பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    • சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
    • இதனைத் தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. உடனே ஷேக் ஹசீனா வங்காளதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

    வங்காள தேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அவர் கொல்ல உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.

    மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அவருக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை ஷேக் ஹசீனா ஏற்கவில்லை. பாரபட்சமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அசாதுஸ்மான் கான் கமலையும் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளது.

    ஷேக் ஹசீனாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இந்திய தரப்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    • ரஷியா தாக்குதலை எதிர்கொள்ள பாதுகாப்பை வலுப்படுத்த ஜெலன்ஸ்கி திட்டம்.
    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

    பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன் விருப்பம் தெரிவித்து, பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஆனால் முழுமையான விவரம் வெளியிடப்படவில்லை.

    கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷியா முழுப்பலத்துடன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து தற்போது வரை ஜெலன்ஸ்கி 9 முறை பிரான்ஸ் சென்றுள்ளார்.

    ரஷியா தொடர்ந்து உக்ரைனின் எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    • சவுதி பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.
    • கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இதன் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

    இந்நிலையில், இந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து வருகிறார்.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.

    வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு ஷேக் ஹசீனா மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பு முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு என ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றம்சாட்டினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    "எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறினார்.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜெர்மனி தடைவிதித்தது.
    • வருகிற 24-ந்தேதி முதல் இந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்காணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    தங்கள் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதியாகும் ராணுவ உபகரணங்கள் காசாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜெர்மனி தடைவிதித்தது.

    இந்த நிலையில் தற்போது இந்த தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி முதல் இந்த நீக்கம் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    கடந்த 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் காசா மீது போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

    ×