என் மலர்
உலகம்
- இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
- மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
டோக்கியோ:
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈக்வடார்:
ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
- செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் முகாம் மீது தாக்குதால் நடத்தப்பட்டது.
- இன்று காலை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு பாலஸ்தீன அகதிகள் முகாம் (ஐன்-எல்-ஹல்வே) மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது. காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்.
- போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை.
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள டெர்னோபில் மீது ரஷியா நேற்றிரவு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 12 குழந்தைகள் உள்பட 37 பேர் காயம் அடைந்துள்ளனர். டெர்னோபில்லி உள்ள இரண்டு 9 மாடி அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
38 வகையான பல்வேறு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் 476 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
சாதாரண வாழ்க்கைக்கு எதிரான ஒவ்வொரு வெட்கக்கேடான தாக்குதலும், போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றுள்ளார். துருக்கி அதிபரை சந்தித்து ரஷியாவுக்கு ராஜாங்கரீதியாலான அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவேன் என ஜெலன்ஸ்தி தெரிவித்துள்ளார்.
முதலில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள துருக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் துருக்கி வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார்.
- இந்த நிகழ்ச்சியில் டிம் குக், எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர். vனத் தெரிவித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.
- இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
- அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் திங்கள்கிழமை ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஸ்லிமா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், "நாசவேலையில் ஈடுபட்டவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனாவை குற்றவாளி என அறிவிக்கும் யூனுஸ் அரசு, அதே செயல்களைச் தாங்கள் செய்யும்போது அவற்றை நீதியானவை என்று அழைக்கிறார்கள்.
யாராவது நாவேலைச் செயல்களைச் செய்தால் தற்போதைய அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிடும்போது, அரசாங்கம் தன்னை ஒரு குற்றவாளி என்று கூறுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்?
ஜூலை மாதம் நாசவேலைச் செய்த பயங்கரவாதிகள், மெட்ரோவுக்கு தீ வைத்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், காவல்துறை அதிகாரிகளைக் கொன்றவர்கள் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?வங்கதேசத்தில் நீதியின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மாணவர் போராட்டங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது. தனது மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று ஹசீனா குற்றம் சாட்டினார்.
அதேநேரம், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று முகமது யூனுஸ் கருத்து தெரிவித்தார்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக வந்த இந்தத் தீர்ப்பு, வங்கதேச அரசியலில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
முகமது யூனுஸ் ஆட்சியில் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினராக இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் யூனுஸ் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
- இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில் முடங்கின.
இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- சுரங்கத்தில் பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
- சுரங்க விபத்தை பார்வையிடுவதற்காக அமைச்சர் பயணித்த விமானம் தீப்பற்றி எரிந்தது.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில் நவம்பர் 15-ம் தேதி பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் வழியாக தப்பி செல்ல முயன்ற போது திடீர் அழுத்ததால் பாலம் சரிந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட காங்கோ சுரங்கத்துறை மந்திரி லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் அவரது குழுவை சேர்ந்த 19 பேர் தலைநகர் கின்ஷாசாவிலிருந்து விமானம் மூலம் லுவாலாபா மாகாணத்தின் கோல்வேசி விமான நிலையம் சென்றனர்.
கோல்வேசி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இருந்து விலகிச்சென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
அங்கிருந்த அவசர கால மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீயையும் அணைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- மேற்கு கரையின் முக்கிய சந்திப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- இந்த பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை சந்திப்பில் வாகத்தை மறித்து, அதில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியதில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் அவசர மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெருசலேமின் தெற்குப் பதியில் பரபரப்பாக இயங்கும் சந்திப்பில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
வாகனத்தில் சென்றவர்கள் மீது 3 பயங்கரவாதிகள் தாக்குதால் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
- போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார்.
- புதிய முயற்சியாக துருக்கில் அமெரிக்க சிறப்பு தூதரை சந்திக்க இருக்கிறார்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியா உக்ரைனில் உள்ள எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா தாக்குதலை முறியடித்து உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளையில் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார். ரஷியாவை எதிர்ப்பதற்கு ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ஸ்பெயினில் இருக்கும் ஜெலன்ஸ்கி நாளை, துருக்கி செல்கிறார்.
துருக்கி செல்லும் அவர் அமெரிக்காவின் சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃவை சந்திக்க இருக்கிறார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்துப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை ரஷியா யாரையும் அனுப்பவில்லை. துருக்கி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
துருக்கி இந்த வருடம் தொடக்கத்தில் உக்ரைன்- ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைகள் மீண்டும் புத்துயிர் பெற நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் எங்கள் கூட்டாளர்களுக்கு முன்மொழியும் தீர்வுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்வது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாகும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பரிந்துரைகளை ரஷியா நிராகரித்ததால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-ரஷியா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷியாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என தெரிவித்தார்.






