என் மலர்tooltip icon

    உலகம்

    • கடந்த ஆண்டு மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது.
    • இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டு.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.

    வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு ஷேக் ஹசீனா மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து டிரம்ப் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார்.

    இதற்கு முன்னதாக ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து டிரம்ப் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வகையில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை டிரம்ப் 2 முறையும் தொடுத்துள்ளார்.

    இந்நிலையில், ஒரு பெண்ணை அதிபராக தேர்ந்தெடுக்க அமெரிக்கா தயாராக இல்லை என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் மாணவி மிட்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய மிட்செல் ஒபாமா, "நாம் கடந்த தேர்தலை பார்த்தோம். அமெரிக்கா மிகவும் பாலியல் ரீதியிலானது. ஒரு பெண்ணை அதிபராக தேர்ந்தெடுக்க தயாராக அமெரிக்கா இல்லை. ஒரு பெண்ணால் நாட்டை வழிநடத்தப்பட முடியாது என்று நினைக்கும் ஆண்கள் இங்கு இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.
    • 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். முகமது அப்துல் சோயிப் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது.

    இவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • முன்னாள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
    • மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன் முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.

    வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். இந்தநிலையில் அவர் மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்து.

    வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவயில் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

    • பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
    • தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.

    இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

    சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் மக்காவில் தங்கள் புனித சடங்குகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.

    நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. 



    • சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது சுரங்க தொழிலாளர்கள் பீதியடைந்த ஓடினர்
    • சுரங்க தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்தது.

    ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

    32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த கனிம உற்பத்தியில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். இதனால் சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, அத்தர் மினல்லா மற்றும் லாகூர் ஐகோர்ட் நீதிபதி ஷம்ஸ் மெஹ்மூத் மிர்சா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில், 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் உள்ள வக்கீல்கள் கால வரையற்ற கோர்ட் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். மேலும் மற்ற நீதிபதிகளும் எதிர்ப்பை காட்டும் விதமாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திடீரென ராட்சத அலை தாக்கியதால் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.
    • இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ கடற்பகுதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

    அதில் இருந்தவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். அப்போது திடீரென ராட்சத அலை தாக்கியதால் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

    தகவலின் பேரில் கடலோர போலீசார் அங்கு சென்றதும் மீட்பு பணி நடைபெற்றது. ஆனால் அவர்கள் செல்வதற்குள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    • வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
    • இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

    இதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.

    புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனை விவரம் இன்று வெளியிட உள்ளதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதையொட்டி வங்கதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் நேற்று தொலைபேசியில் உரையாடினர். ரஷியா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் காசாவில் நடந்த போர் நிறுத்தம் குறித்து நேதன்யாகுவிடம் புதின் பேசியுள்ளார். 

    நேதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் மத்திய கிழக்கு அரசியல் குறித்து புதின் விவாதித்ததாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

    காசா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியாவில் உள்ள அரசியல் நிலைமை குறித்தும் இருவரும் விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன் படி, ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.

    அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்ததிலிருந்து, ஹமாஸ் 25 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேல் ஒருதலைப்பட்ச தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 23 முதல், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

    • வெனிசுலா அதிபர் நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
    • அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    இதையடுத்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. டிரம்பின் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே அமெரிக்கா சமீபகாலமாக கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறது. மேலும் வெனிசுலாவிற்குள் ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக டிரம்பிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் ஆபரேசன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களையும், 15 ஆயிரம் துருப்புகளையும் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவம் குவித்துள்ளதால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து சிறப்பு அவசர நிலையை வெனிசுலா அதிபர் நிகோலஸ் அறிவித்து நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியாது. அதுபற்றி விரைவில் சொல்வேன் என்றார். இதனால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக கருதப்படுகிறது.

    ×