என் மலர்
உலகம்
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
- இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.
இதற்கிடையே இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளன.
இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 14 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அதே வழக்கில், ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 14 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தம் 17 குற்றவாளிகளுக்கு தலா ஒரு லட்சம் வங்கதேச டாக்கா அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், நவம்பர் 27 ஆம் தேதி, இதேபோன்ற ஊழல் குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றொரு வங்கதேச நீதிமன்றம்.
அதற்கும் முன்னதாக கலவரத்தின் போது மனிதகுலத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள நிலையில் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
- அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ம் தேதி மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.
சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.
ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.
- திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம்.
- என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான்
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது மனைவி, குடும்பம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
அந்த பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். இதுகுறித்த முழு தகவல் தெரியவில்லை.
அதேபோல நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு 'சேகர்' என சூட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பைசாபாத் அருகே இன்று காலை 7.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
- கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.
- கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
- தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
துருக்கி அருகே கருங்கடலில் ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய டிரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.
துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷியாவை சேர்ந்த 'கைரோஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் டிரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. மேற்கு நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும் ரஷிய இந்த கப்பல்கள் மூலம் எண்ணெய் விற்று, உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எனவே நீரில் செல்லக் கூடிய டிரோன்கள் மூலம் அவற்றை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
- சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் உயிரிழந்தார்.
விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்த இங்கிலாந்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜய்யின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான்கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
- சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் இம்ரான்கானின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் சிறையில் இம்ரான்கான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பியான குர்ராம் ஜீஷன் கூறியதாவது:-
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இம்ரான்கானின் புகழைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால்தான் அவரது படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட அனுமதிக்கவில்லை. அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதமாகி விட்டது. அவரை சந்திக்க குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.
கடந்த சில நாட்களில் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் உயிருடன் இருக்கிறார். தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான்கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். அவர் வெளிநாடு சென்று அவர் விரும்பும் இடத்தில் அமைதியாக இருந்தால் அவருக்கு சலுகைகள் கூட வழங்குவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
ஆனால் அதை இம்ரான் கான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் இம்ரான்கானின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
- கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.
இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.
- இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
- ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.






