என் மலர்tooltip icon

    உலகம்

    ஹாங்காங் தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்வு
    X

    ஹாங்காங் தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்வு

    • அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ம் தேதி மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.

    சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.

    Next Story
    ×