என் மலர்
உலகம்
- ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.
- 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.
ஸ்பேஸ் எக்ஸ்ன், ஸ்டார்ஷிப் பிளைட்5 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ், இன்று தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது.
இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது.
ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.
வலைதளங்களில் பலரும் இதன் வீடியோவை பகிர்ந்து "என்னால் இதை நம்பவே முடியவில்லை" என ஆச்சரியத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
- கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கணினி ஒன்று கைப்படறப்பட்டுள்ளது.
- ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
ரகசிய ஆவணங்கள்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ள நிலையில் ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல் குறித்த முக்கிய ரகசியங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கணினியில் இருந்து 36 பக்க ரகசிய ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைதி
அந்த ஆவணத்தின்படி, கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் ஒரு வருடத்துக்கு முன்பாகவே 2022 ஆம் ஆண்டிலேயே நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்ட இந்த திடீர் தாக்குதலுக்காகக் கடந்த 2021 முதல் ஹமாஸ் அமைப்பு எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இஸ்ரேலை நம்ப வைக்க அமைதி காத்து வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டபோதும் ஈரான், ஹிஸ்புல்லா உதவியைப் பெறும்வகையில் திட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் ஆன பின்னர் காசா தெற்கு முனையிலும், அல்அக்சாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவுபடுத்தப்பட்டுவந்ததால் ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதில் உறுதியாக இருந்துள்ளது. ஜூலை 2023 இல் லெபனானில் ஈரான் படைத்தலைவரைச் சந்திக்க ஹமாஸ் தரப்பில் இருந்து உயர் மட்ட அதிகாரி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார்.
உதவி
அப்போது இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டம் குறித்து இரான் படைத்தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிக நேரம் செலவிட்டு கச்சிதமாகத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அந்த கணினியில் கிடைத்த ஆவணத்தின்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுடனும் ஹமாஸ் திட்டம் குறித்து விவாதித்துள்ளது.

இந்த சந்திப்புகளின் பின் ஈரான், ஹிஸ்புல்லா பின்னணியில் ஆதரவு அளிக்கும் என்ற தைரியம் ஹிஸ்புல்லவை அக்டோபர் 7 தாக்குதலை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும் ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், ஹமாஸ் தலைவர் யாஹோவா சின்ஹார் ஈரானிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்கள் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


திட்டம்
அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேல் நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள், ராமானுவ கமாண்ட் சென்டர்களும் முதலில் குறிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று டுவின் டவர்ஸில் அல் கொய்தா நடத்திய 9/11 தாக்குதலைப் போல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள அஸ்ரேலி [Azrieli] டவர்ஸ் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஹமாஸ் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

- மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.
- ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் (வயது 59), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (வயது 78) போட்டியிடுகிறார்கள். அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இரு வேட்பாளர்களும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையை கமலா ஹாரிசின் டாக்டர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார். அதில், கமலா ஹாரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.
ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து உள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் தனது உடல்நிலை குறித்த விரிவான தகவல்களை வெளியிட மறுத்து வரும் நிலையில் கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். கமலா ஹாரிசுக்கு முன்பு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வயது ஆகிவிட்டதாக டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளதால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன
- எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஈரான் இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த இந்த சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் குறித்து பேசிய ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன. முக்கியமாக ஈரான் அணுசக்தி மையங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், துறைமுகங்கள் என அனைத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஈரான் அரசு நிர்வாகங்கள் மீதே நடந்துள்ள இந்த சைபர் தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல ஈரான் அரசு தடை விதித்துள்ளது.
- ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஜெருசலேம்:
பிரபல இந்திய தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.
- பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- சுமார் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சான்ஜோஸ்:
வட அமெரிக்கா இடையே பசிபிக் கடலில் கோஸ்டாரிகா என்ற தீவு நாடு உள்ளது. இன்று அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சான்ஜோஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இங்கு பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
- துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக நடந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன
- கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது பலநாள் திட்டமிட்ட செயலாக தெரிகிறது
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துமதத்தைப் பின்பற்றும் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. தற்போது நவராத்திரி விழா கொண்டாட்டங்களை ஒட்டி அந்த தாக்குதல்கள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.
நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக நடந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த இடையூறு சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தலைநகர் டாக்காவில் உள்ள தண்டிபஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை மண்டபம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றும், இதில் 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பிரதமர் மோடி சார்பில் வங்கதேசத்தின் சக்திரா நகரில் உள்ள ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் அம்மனுக்கு வழங்கப்பட்ட கிரீடம் திருடுபோன சம்பவமும் நிகழ்ந்தது. இந்த தொடர் சம்பவங்களைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது. கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது பலநாள் திட்டமிட்ட செயலாக தெரிகிறது. இதை நாங்கள் கவனித்து வருகிறோம். புனிதப் பண்டிகை காலத்தில் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரினதும் அவர்களது வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம்.
- அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஏவியது ஈரான்.
இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ரகசிய சேனல்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
- கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- நிகழ்ச்சிக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ஏ.ஆர். ரகுமானுடன், உலகத் தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாட உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதே போல் ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட நிகழ்ச்சி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- எதிர்காலத்தில் இந்த அளவிலான புயல்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- மொராக்கோவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு மொராக்கோவில் இரண்டு நாட்கள் பெய்த கனமழைக்கு கடுமையான வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது சராரியை விட அதிகமாகும். தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 24 மணி நேரத்தில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஏரிகள் நிரம்பியுள்ளது நாசால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வறண்ட சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர வானிலை காரணமாக அதிகரிப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்காலத்தில் இந்த அளவிலான புயல்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
முன்னதாக, மொராக்கோவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகளும் அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
20 ஆண்டுகளாக தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீட்டு சிறையில் அடைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலின் நோவோ ஓரியண்டேயில் உள்ள வீட்டு சிறையில் இருந்து மகள் ஒருவர் தப்பித்து வந்து போலீசாரிடம் தந்தையின் துன்புறுத்தல்களை கூறியுள்ளார். அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து வீட்டு சிறையில் வைத்ததாக கூறப்படுகிறது. மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து செல்வார். அண்டை வீட்டுக்காரர்கள் எவருக்கும் அவரது மனைவியைத் தெரியாது. ஏன் உறவினர்கள் கூட அப்பெண்ணை அணுகவில்லையாம்.
3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகளும் அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குளிப்பதையும் ஆடை அணிவதையும் பார்க்க அந்த நபர் வீட்டின் சுவர்களில் துளைகளை துளைத்ததாக மகள்கள் கூறியுள்ளனர். மேலும் கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு அந்த நபர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இறந்து போன தனது மாமியாரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. உடல் நலக்குறைவு ஏற்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கைதான அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
- மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் இவர்களை பாதித்துள்ளது
- சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம் முழுவதும் உள்ள 8 பெண்களில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு துன்புறுத்தலுக்கும் ஆளாவதை ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று [அக்டோபர் 11] அனுசரிக்கப்படுவதை ஒட்டி ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகில் தற்போதுள்ள பெண்களில் 37 கோடி பேர் [8 இல் ஒருவர்] பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது. உடல் ரீதியாக அல்லாது, இணையவழியில் 65 கோடி பெண்கள் [5 இல் ஒருவர்] துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சகாரா ஆப்பிரிக்காவில் 7.9 கோடி பெண்களும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7.5 கோடி பெண்களும், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளைச் சேர்ந்த 7.3 கோடி பெண்களும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6.8 கோடி பெண்களும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் 4.5 கோடி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் அரசியல் நிலைத்தன்மை அற்ற சூழலால் படைக்கப்பட்டுள்ள நாடுகளில் அதிக அளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐநா அமைப்பின் அகதி முகாம் பகுதிகளில் தங்கியுள்ள 4 பெண்களில் ஒருவர் அங்கு வருவதற்கு முன் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
பாதிக்கப்படும் பெண்களில் 14 முதல் 17 வயதுடைய சிறுமிகளே அதிகம். ஒருமுறை துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிகளே மீண்டும் மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுவதால் அதன் மனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்கம் அவர்களை விட்டு நீங்குவதே இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் உள்ளிட்டவற்றால் அவதியுறும் இவர்கள், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 24 முதல் 31 கோடி பேர் 18 வயதுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.






