என் மலர்
உலகம்
- ஜனவரி முதல் வாரம் வரை ஜோ பைடன் அதிபராக இருப்பார்.
- இந்த இடைக்காலத்தில் கமலா ஹாரிஸை முதல்வராக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால் டிரம்ப், ஜனநாயக கேட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்தார். இதனால் அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்க முடியாமல் கமலா ஹாரிஸ் ஏமாற்றம் அடைந்தார்.
இந்தநிலையில் ஜோ பைடன் ராஜினாமா செய்து குறுகிய காலத்திற்கு கமலா ஹாரிஸை அதிபர் ஆக்கினால் முதல் பெண் அதிபர் என்ற சாதனையாகிவிடும் என கமலா ஹாரிஸின் முன்னாள் தகவல்தொடர்பு இயக்குனர் ஜமால் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜோ பைடன் அற்புதமான அதிபர். அவர் தெரிவித்த ஏராளமான வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். அங்கு ஒரு வாக்குறுதி மீதமுள்ளது. அதை அவர் ஒரு இடைக்கால உருவமாக நிறைவேறற முடியும். அடுத்த 30 நாட்களுக்கான அதிபர் என்பதை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸை நியமிக்க வேண்டும்.
இது ஜோ பைடனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. இதை அவர் செய்து, தனது கடைசி வாக்குறுதியை நிறைவேற்றினால், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47-வது அதிபராகும் வாய்ப்புள்ளது" என்றார்.
- இலங்கை அரசால் தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் வழங்கப்படும்.
- சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக தீர்க்கமான நிலை எடுக்கப்படும்.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின் தமிழர்கள் வாழும் ஜாஃப்னாவிற்கு முதன்முறையாக சென்றார். அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இலங்கை அரசால் தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் வழங்கப்படும். இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக தீர்க்கமான நிலை எடுக்கப்படும் என்றார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதேவேளையில் ஏராளமானோர் நீதி கேட்கும் முக்கியமான பிரச்சனையான காணாமல் போனவர்கள் குறித்த ஆலோசனையில் விலகியிருப்பதாக தெரிவித்தார்.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு டிரம்ப் பேசினார்
- நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்று ரஷியா அதிபர் மாளிகை [கிரம்லின்] செய்தித்தொடர்பாளர் டிமிட்ட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்
உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் நின்ற முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார்.
அமெரிக்க அதிபர் ஒருவர் முதல் முறையாக வட கொரியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபரை சந்திப்பதெல்லாம் டிரம்ப்பின் ஆட்சி காலத்திலேயே நடந்தது. இந்நிலையில் மீண்டும் அதிபராக உள்ள டிரம்ப் ஜனவரியில் பதவி ஏற்க உள்ளார்.
ஆனால் அதுவரை காத்திருக்காமல் தற்போதே சர்வதேச சூழலை கையால தொடங்கியுள்ளார் டிரம்ப். இஸ்ரேல்- பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன் - ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய சவால்கள் ஆகும்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு டிரம்ப் சமீபித்தில் பேசினார். இந்நிலையில் தற்போது ரஷிய அதிபர் புதின் உடனும் தொலைப்பேசி வாயிலாக டிரம்ப் உரையாடி உள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது மார்- இ- லாகோ எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வரும் டிரம்ப் அங்கு வைத்து புதினுக்கு போன் செய்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலில் உக்ரைன் போரை மேற்கொண்டு தீவிரப்படுத்த வேண்டாம் என்று டிரம்ப் புதினை வலியுறுத்தியதாக தெரிகிறது.

போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்தும் இந்த போன் காலில் பேசப்பட்டுள்ளதாக வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் எந்நேரமும் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை நிறுவ முடியும் என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக தெரிகிறது. ஐரோப்பா - அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ நாடுகளில் சேர முயன்றதால் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 இல் போர் தொடுத்தது.
அதுமுதல் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை வழங்கி வருகிறது. முன்னதாக டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் டிரம்ப் அதிபவராது நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்று ரஷியா அதிபர் மாளிகை கிரம்லின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ட்ரி பெஸ்கோவ் நேற்றைய தினம்[ஞாயிற்றுகிழமை] தெரிவித்தார்.

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து அழித்து வருகிறது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது. இந்த நிலையில் கல்லறை தோட்டத்திற்குள் கல்லறைகளுக்கு நடுவே ஹிஸ்புல்லா பிரமாண்ட சுரங்கத்தை அமைத்துள்ளது. இந்த சுரங்கம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதற்குள் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் வசதி கொண்ட அறைகள் இருந்தன. மேலும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் மனித உயிரை ஹிஸ்புல்லா மதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது.
4500 கனமீட்டர் கான்கிரீட் கொண்டு அந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியுள்ளது. கடந்த மாதம் லெபனானில் மக்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளே சுரங்கப்பாதை அமைத்திருந்தது. காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இதுபோன்று சுரங்கங்கள் அமைத்ததில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இதில் சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர். 40 பேர் பலியாகினர்
- ஒரே நாளில் ஹேக்கிங் மூலம் இந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மீர் போர் தொடுத்து கடந்த 13 மதங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அண்டை நாடான லெபனானில் இருந்தபடி செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் நெருக்கடியைத் தந்து வந்தது. லெபனான் எல்லையில் இருந்தபடி இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனால் ஹிஸ்புல்லா மீதான அதிரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டம் டீ தீட்டி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அனைவரையும் அதிரவைத்த அந்த சம்பவம் நடந்தது. லெபனான் முழுவதிலும் பரவி உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லாவின் பாக்கெட்டுகளில் இருந்த கருவிகள் வெடித்தன. இதில் சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர். 40 பேர் பலியாகினர். பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு மின் சாதனங்களும் வெடித்தன. இதனால் ஹிஸ்புல்லா கடும் பாதிப்பை சந்த்தித்தது.

தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர்செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிக்கப்படும்போதே இந்த பேஜர்களில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட்டின் கை உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல நாட்கள் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் ஹேக்கிங் மூலம் இந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேஜர் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தாலும், இதுவரை வெளிப்படையாக எதுவும் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் இந்த பேஜர் தாக்குதலை நடத்தியது தங்கள் நாடுதான் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். லெபனானில் நடத்திய பேஜர் தாக்குதல் ஆபரேஷனுக்கு தான் ஒப்புதல் வழங்கியதாக நேற்றைய தினம் நேதன்யாகு பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு ஹிஸ்புல்லாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது.
- ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கி.மீட்டர் தொலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது. மேலும் ஹோல்யின், குவான்ட்னாமோ போன்ற நகரிங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பிலோன் என்ற சிறிய கிராமத்தில் உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து சிலமணி நேரத்தில் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவை கடுமையாக தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் கியூபாவை தாக்கியுள்ளது.
அக்டோபர் மாதம் இறுதியில் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் மக்கள் இருளில் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் ராணுவம் 30க்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
- பாதுகாப்புக்காக 3 விமான நிலையங்களை மூடியது ரஷியா.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் மொத்தம் 34 டிரோன்களைக் கொண்டு இன்று தாக்குதல் நடத்தியது.
ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 34 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணமாக டொமோடெடோவோ உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
இதேபோல், மாஸ்கோ தவிர பிற பகுதிகளிலும் தாக்குதல் நடத்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
- காசாவில் உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.
- போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை
அக்டோபர் 7 தாக்குதல்
கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
பழிக்குப் பழி
இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹிஸ்புல்லா - லெபனான்
இதற்கிடையே ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைப்பதாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 2500 லெபனானியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் தலைநகர் பெய்ரூட் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை துறந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். அண்டை நாடான சிரியாவுக்கு எல்லை வழியாக லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
ஈரான் சூழல்
இதுதவிர்த்து ஈரான் - இஸ்ரேல் மோதலும் முற்றியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலால் நிலைமை மோசமானது. இதற்கு பதிலடியாக ஈரான் நிலைகள் மீது இஸ்ரேலும் தாக்கியது. அடுத்ததாக ஈரான் அணு ஆயுத தளங்கள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளை இஸ்ரேல் தாக்கினால் பதற்றம் அதிகரிக்கும். போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.
கைவிரித்த கத்தார்
இந்த சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த பிணை கைதி பரிமாற்ற அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்கா, எகிப்து முன்னெடுப்பில் கத்தார் நாட்டில் வைத்து நடந்து வந்தது. ஆனாலும் இஸ்ரேல் , மற்றும் ஹமாஸ் பிடி கொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை என விரக்தி தெரிவித்து கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ் அதிகம் கத்தாரில் உலாவுவதும், தோஹா நகரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் கட்டடம் இருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. சமீபத்தில் முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்காததால் அவர்களை கத்தாரில் இருந்து வேலையற்ற அமெரிக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இடது - அமெரிக்க வெளியுறவு செயலாளர் - கத்தார் தலைவர் - வலது
உறவு
எனவே ஹமாஸ் அலுவலகத்தை அடுத்த 10 நாட்களில் மூட கத்தார் உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் கத்தார் வெளியுறவுத்துறை அதனை மறுத்து எதற்கு வம்பு என்று அமைதி பேச்சுவார்த்தையிலிருந்தே மொத்தமாக விளங்கியுள்ளது.
தற்போதைய நிலைமைக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து தரப்பினரும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டினால் மட்டுமே தங்கள் முயற்சியை மீண்டும் தொடர்வோம் என்று கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடாக இருந்த கத்தார் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதாக இருந்த நிலையில் கத்தார் தற்போது கை விரித்துள்ளதால் அமைதிப் பேச்சுவார்த்தையில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கத்தார் இடத்தில் அடுத்ததாக துருக்கி அமைதி பேச்சுவார்த்தை இடமாக அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் . அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் கத்தாரின் இந்த முடிவு வெளிவந்துள்ளதையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
- இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது.
அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த விருந்தில் அசைவ உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் வாழும் சில இந்து தலைவர்கள் அந்நாட்டு பிரதமரை கடுமையாக விமர்சித்தனர்.
சென்ற வருடம் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரிஷி சுனக் அளித்த விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை உண்டு பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
- இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் நிற்கிறார்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்னர். காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த சம்பத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி போலீஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர்.
கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான எஸ்எஃப்ஜெ [சீக் ஃபார் ஜஸ்டீஸ்] இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இந்தர்ஜித் கோசல் என்று நபர் எஸ்எஃப்ஜெ இயக்க ஒருங்கிணைப்பாளர் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேடையின் படிகளில் விரிக்கப்பட்டிருக்கும் இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

- ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
- 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி தெரிவித்தார்.
மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்தில் 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
"முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதல் காரணமாக சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை. தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன," என்று சோபியானின் கூறினார்.
கிரெம்லினில் இருந்து தென்கிழக்கில் சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள ராமென்ஸ்காய் மாவட்டம், கடந்த செப்டம்பர் மாதம் ரஷிய தலைநகர் மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. அப்போது ரஷிய வான் பாதுகாப்பு பிரிவுகள் 20 டிரோன்களை பதில் தாக்குதல் நடத்தி அழித்தன.
- 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
- வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஸ்விங் மாகாணங்கள் ஆகும்.
உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.
அமெரிக்க தேர்தல் நடைப்முறைப்படி 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்கள். அந்த வகையில் 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வெற்றியை மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ் வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவையும் இந்த முறை டிரம்ப்புக்கு அமோக ஆதரவளித்துள்ளன.

இதில் அரிசோனா மாகாணத்தில் முடிவு மட்டும் வெளியாகவில்லை. அங்கு அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானவதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
இந்த நிலையில் மற்ற 6 ஸ்விங் மாகாணங்களில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது அரிசோனாவிலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாகாணங்களின் தேர்தல் முடிவுகளில் டிரம்பின் வாக்கு எண்ணிக்கை 312-ஆக உயர்ந்தது. கமலா ஹாரிஸ் 226 வாக்குகள் பெற்றார்.
இதற்கிடையே வருகிற 13-ந்தேதி டிரம்ப்-ஜோபைடன் அதிகார பரிமாற்றம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்கள். வரும் ஜனவரி மாதத்துடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.






